நான் தியேட்டரில் பார்த்த முதல் படம் அதுதான்… தந்தை விஜயின் படம் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய்
Jason Sanjay taks about first theater experience | தளபதி விஜயின் மகனாக தமிழக மக்களிடையே அறிமுகம் ஆன ஜேசன் சஞ்சய் தற்போது சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகிறார். அவர் சமீபத்தில் தான் திரையரங்கில் பார்த்த முதல் படம் குறித்து பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வந்து தற்போது தமிழ் நாட்டின் முதலமைச்சராக ஆகியுள்ளார் தளபதி விஜய். இவரது மகன் ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் தற்போது இயக்குநராக கால் பதித்து உள்ளார். அதன்படி ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் சிக்மா என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்தப் படத்தின் மூலமாக ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகம் ஆகும் இந்த சிக்மா படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் நாயகனாக நடித்து உள்ளார். சினிமாவிற்கு வருவதற்கு முன்பே ஜேசன் சஞ்சய்க்கு நடிகர் சந்தீப் கிஷனின் நடிப்பு பிடிக்கும் என்றும் அவருடைய ரசிகர் தான் என்றும் ஜேசன் பலப் பேட்டிகளில் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சிக்மா படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து தற்போது வெளியீட்டிற்கான போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. மேலும் இந்த சிக்மா படம் தொடர்பான அப்டேட்களும் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் நேற்று சிக்மா படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரமாண்டமாக நடைப்பெற்றது.
தந்தை விஜயின் படம் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய்:
இந்த விழாவில் படக்குழுவினர் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். அதில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் மேடையில் ஏறி பேசும் போது அவரிடம் படம் தொடர்பாகவும் சினிமா தொடர்பாகவும் பல கேள்விகள் எழுப்பப்பட்டது. அப்போது ஜேசன் சஞ்சயிடம் அவர் தியேட்டரில் பார்த்த முதல் படம் எது என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஜேசன் சஞ்சய் தான் திரையரங்குகளில் பார்த்த முதல் படம் திருமலை என்றும் அந்தப் படத்தை தான் 3 வயதாக இருக்கும் போது திரையரங்குகளில் பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… 25 நாளில் விஸ்வநாத் & சன்ஸ் படம் வசூலித்தது எத்தனை கோடிகள் தெரியுமா? அப்டேட் இதோ
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Q: What’s the First film which you have watched in theatres❓#JasaonSanjay: #Thiumala when i was 3 years old
Q: First film which inspired you to become director❓#JS: Yarum thitanga, a brazil film called City of God
Q: First short film which you have directed❓#JS: Pull the… pic.twitter.com/pEUp7I8aNA
— AmuthaBharathi (@CinemaWithAB) September 8, 2026
Also Read… அசோக் செல்வனின் அன்பில் அவன் படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்டது படக்குழு – வைரலாகும் பதிவு



