AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ரவி மோகன் இயக்கும் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார் கெனிஷா

Keneeshaa makes her debut as a music composer | நடிகர் ரவி மோகன் இயக்குநராக அறிமுகம் ஆகும் அன் ஆர்டினரி மேன் படத்தில் பாடகி கெனிஷா இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக தற்போது பதிவு வெளியிட்டு தெரிவித்துள்ளது.

ரவி மோகன் இயக்கும் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார் கெனிஷா
கெனிஷாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 07 Sep 2026 11:39 AM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ரவி மோகன். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. முன்பு எல்லாம் சினிமாவில் ஆரம்ப காலக்கட்டத்தில் என்ன பணியை செய்து வருகிறாரோ அதே பணியை இறுதிவரை தொடர்ந்து வருவார்கள். சினிமாவிலேயே இருந்தாலும் மற்ற துறைகளில் அவர்கள் தங்களின் திறமைகளை முயற்சி செய்து பார்த்தது என்பது மிகக் குறைவு. ஆனால் தற்போது சினிமாவில் உள்ள தலைமுறையினர் தாங்கள் எந்த பணியை சினிமாவில் தொடங்கி இருந்தாலும் மற்ற துறைகளிலும் பணியாற்ற தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் நாயகனாக ஹிட் படங்களை கொடுத்து வரும் நடிகர் ரவி மோகன் தற்போது இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என இரண்டு புது அவதாரங்களை எடுத்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் நடிகர் ரவி மோகன் தற்போது தயாரித்து இயக்கி வரும் படம் அன் ஆர்டினரி மேன். இந்தப் படத்தில் கதையின் நாயகனாக நடிகர் யோகி பாபு நடித்து வருகிறார். தொடர்ந்து படம் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி ரசிகரக்ளிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் படக்குழு தற்போது வெளியிட்ட அப்டேட் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அன் ஆர்டினரி மேன் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார் கெனிஷா:

அதன்படி அன் ஆர்டினரி மே படக்குழு நேற்று படத்தில் இருந்து முதல் சிங்கிள் எப்போது வெளியாகும் என்பது குறித்த அப்டேட் விரைவில் வரும் என்று தெரிவித்து இருந்தனர். ஆனால் அந்தப் பதிவில் இசையமைப்பாளரின் பெயர் எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் இன்று ரவி மோகன் ஸ்டூடியோஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் அன் ஆர்டினரி மேன் என்ற படத்தின் மூலம் பாடகி கெனிஷாவை இசையமைப்பாளராக அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளனர். இவர் நடிகர் ரவி மோகனின் தோழி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரவி மோகனின் குடும்ப பிரச்சனைகளில் இவரின் பெயரும் அடிபட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படக்குழு வெளியிட்ட இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… மம்முட்டியின் பிறந்த நாள் ஸ்பெஷல்… நாளை ஓம் படத்திலிருந்து வெளியாகும் சிறப்பு வீடியோ

அன் ஆர்டினரி மேன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக நுழைந்த லக்‌ஷ்மி பிரியா

Follow Us