AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக நுழைந்த லக்‌ஷ்மி பிரியா

Bigg Boss Tamil Season 10: தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெறும் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 10-வது சீசன் தற்போது தொடங்கி உள்ளது. இதில் முதல் போட்டியாளராக யார் உள்ளே சென்றார் என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் தற்போது பார்க்கலாம்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக நுழைந்த லக்‌ஷ்மி பிரியா
மகாநதி சீரியல் நடிகைகள்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 06 Sep 2026 18:56 PM IST

தமிழ் சின்னத்திரையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 10-வது நிகழ்ச்சி இன்று கோலாகலமாக தொடங்கியது. முன்பு ஒளிபரப்பான 9 சீசன்களில் இருந்து பல மாறுபாடுகளுடன் இந்த நிகழ்ச்சியின் வீடு மட்டும் இல்லாமல் விளையாட்டும் மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முன்பு ஒளிபரப்பான 9 சீசன்களைவிட இந்த 10-வது சீசன் தொடங்குவதற்கு முன்பே இந்த நிகழ்ச்சி குறித்து ரசிகர்கள் அதிக அளவில் பேசுவதற்கு காமன் மேன் என்ற ஷோவை நடத்தி பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல நினைக்கும் சாதாரண மக்களுக்கு வாய்ப்பு கொடுப்பதாக அறிவிக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியே பெரும் சர்ச்சைகளை கிளப்பிய நிலையில் அதற்கு அடுத்ததாக தற்போது பிக்பாஸ் தமிழ் 10-வது சீசன் தொடங்கி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரபலங்களும் கலந்து கொள்ள உள்ள நிலையில் ஒவ்வொரு போட்டியாளராக தற்போது வீட்டிற்குள் செல்கின்றனர்.

அந்த வகையில் தற்போது முதல் போட்டியாளராக இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் வீட்டிற்குள் முதல் போட்டியாளராக என்ட்ரி கொடுத்துள்ளார் நடிகை லக்‌ஷ்மி பிரியா. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான மகாநதி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றார். அந்த சீரியலில் இவரது கதாப்பாத்திரம் காவேரி. இவரை ரசிகர்கள் காவேரி என்றே அழைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக நுழைந்த லக்‌ஷ்மி பிரியா

இந்த நிலையில் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய போது முதல் மூன்று போட்டியளர்கள் அழைக்கப்பட்டனர். அதில் முதலாவதாக லக்‌ஷ்மி பிரியா, சாதிகா மற்றும் சப்னம் ஆகியோர் மேடையில் நிறுத்தி வைக்கப்பட்டனர். அதில் மூன்று பேரில் இருந்து ஒருவரை வெளியேற்றி இரண்டு பேரை உள்ளே அனுப்ப முடிவு செய்தனர். அதன்படி இந்த மூன்று பேரில் இருந்து அங்கு இருக்கும் மக்கள் ஓட்டு போட்டு அதில் குறைவான வாக்கை பெற்றவர் மேடையில் இருந்தே வெளியேற்றுகின்றனர்.

அதில் மூன்று நடிகைகளில் குறைவான வாக்கு பெற்ற சப்னம் என்ற நடிகை வெளியேற்றப்பட்டார். மற்ற இரண்டு பேருமே மகாநதி சீரியலில் நடித்த லக்‌ஷ்மி பிரியா மற்றும் சாதிகா இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… கருப்பனின் ஆட்டம் தொடர்கிறதா? இணையத்தில் வைரலாகும் கருப்பு 2 படத்தின் தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Bigg Boss Tamil Winner List: பிக்பாஸ் தமிழ் சீசன் 1 முதல் 9 வரை வெற்றியாளர்களின் பட்டியல் இதோ

Follow Us