AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இயக்குநர் ரவி மோகனின் அன் ஆர்டினரி மேன் படத்தின் முதல் சிங்கிள் அப்டேட் இதோ

An Ordinary Man Movie First Single Update | நடிகர் ரவி மோகன் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள படம் அன் ஆர்டினரி மேன். இந்தப் படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் முதல் சிங்கிள் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

இயக்குநர் ரவி மோகனின் அன் ஆர்டினரி மேன் படத்தின் முதல் சிங்கிள் அப்டேட் இதோ
அன் ஆர்டினரி மேன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 06 Sep 2026 19:34 PM IST

தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றவர் நடிகர் ரவி மோகன். இவர் இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியான ஜெயம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தினை தொடர்ந்து அவரை பல ஆண்டுகளாக ரசிகர்கள் ஜெயம் ரவி என்றே அழைத்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது ரசிகர்கள் மற்றும் திரையுலகினருக்கு அவர் ஒரு கோரிக்கையை வைத்தார். இனி தனது பெயருடன் தனது தந்தையின் பெயரை இணைந்து ரவி மோகன் என்று அழைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். கடந்த 2024-ம் ஆண்டு முதல் ரவி மோகனின் சினிமா வாழ்க்கை மட்டும் இன்றி சொந்த வாழ்க்கையும் அதிக அளவில் செய்திகளில் இடம்பிடித்து வருகின்றது.

அதன்படி கடந்த 2025-ம் ஆண்டில் நடிகர் ரவி மோகன் நடிகரில் இருந்து தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் என இரண்டு புது அவதாரங்களை எடுத்தார். அப்படி அவர் இயக்குநராக அறிமுகம் ஆகி தற்போது இயக்கி வரும் படத்தின் பெயர் அன் ஆர்டினரி மேன். இந்தப் படத்தை ரவி மோகனின் தயாரிப்பு நிறுவனமான ரவி மோகன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகின்றது.

அன் ஆர்டினரி மேன் படத்தின் இசையமைப்பாளர் இவரா?

மேலும் இந்தப் படத்தில் நடிகர் யோகி பாபு கதையின் நாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படத்தின் முதல் சிங்கிள் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த அன் ஆர்டினரி மேன் படத்திற்கு கெனிஷா ரவி மோகனில் தோழியான பாடகி தான் இசையமைப்பாளராக பணியாற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வந்தது. இந்த நிலையில் தற்போது படக்குழு வெளியிட்ட பதிவில் கெனிஷாவின் பெயரை குறிப்பிட்டு உள்ளனர். அது தற்போது வைரலாகி வருகின்றது.

Also Read… தனுஷ் நடிப்பில் ரோம்-காம் பாணியில் வெளியான திருடா திருடி படம் 23 ஆண்டுகளை நிறைவு செய்தது – இயக்குநர் வெளியிட்ட பதிவு!

அன் ஆர்டினரி மேன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… தமிழ் சினிமாவில் நான் நடித்த முதல் படம் ட்ராகன் இல்லை… கயாடு லோஹர் ஓபன் டாக்

Follow Us