AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பெளர்ணமி- வார விடுமுறை.. சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. முழு விவரம்!

Weekend Special Buses : தமிழகத்தில் பெளர்ணமி, முகூர்த்தம் மற்றும் வாரவிடுமுறையையொட்டி, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதேபோல, சொந்த ஊர்களில் இருந்து சென்னை உள்ளிட்ட வெளியூர்களுக்கும் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பெளர்ணமி- வார விடுமுறை.. சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. முழு விவரம்!
கோப்புப்படம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 23 Oct 2026 08:24 AM IST

தமிழகத்தில் பௌர்ணமி, முகூர்த்தம் மற்றும் வார விடுமுறை நாட்கள் என தொடர்ந்து வருகிறது. இதன் காரணமாக, வெளியூர்களில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கும், வேறு இடங்களுக்கும் பயணம் செய்வார்கள். அவ்வாறு பயணம் மேற்கொள்ளும் பொது மக்களுக்கு வசதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பேருந்துகள், சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் இருந்து

  • திருவண்ணாமலை.
  • திருச்சி.
  • மதுரை.
  • நாகர்கோவில்.
  • கும்பகோணம்.
  • கோயம்புத்தூர்.
  • நெல்லை.
  • சேலம்.
  • கன்னியாகுமரி.
  • திருப்பூர்.
  • தூத்துக்குடி.
  • ஈரோடு

மேலும் படிக்க: பழனி முருகன் கோயில் பக்தர்கள் கவனத்துக்கு.. ரோப் கார் ஆன்லைன் முன்பதிவு நிறுத்தம்.. நிர்வாகம் அறிவிப்பு!

இன்றும், நாளையும் 1,260 அரசு சிறப்பு பேருந்துகள்

ஆகிய மாவட்டங்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை ( அக்டோபர் 23- ஆம் தேதி) 775 அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதேபோல, நாளை சனிக்கிழமை ( அக்டோபர் 24- ஆம் தேதி) 485 அரசு சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து

  • நாகப்பட்டினம்.
  • வேளாங்கண்ணி.
  • பெங்களூர்.
  • ஓசூர்

திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

ஆகிய ஊர்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை 95 அரசு சிறப்பு பேருந்துகளும் நாளை சனிக்கிழமை 85 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. இதே போல, வருகிற அக்டோபர் 25- ( ஞாயிற்றுக்கிழமை) பௌர்ணமி வருகிறது. இதன் காரணமாக திருவண்ணாமலை ஸ்ரீ உண்ணா முலையம்மன் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு பயணம் மேற்கொள்வார்கள். அவர்களின் வசதிக்காக 250 சிறப்பு பேருந்துகள் திருவண்ணாமலைக்கு இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து . . .

அத்துடன், பெங்களூர், ஈரோடு, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 100 அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதே போல, மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில், மாதவரத்தில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை மற்றும் நாளை சனிக்கிழமை ( அக்டோபர் 23, 24- ஆம் தேதிகளில்)

  • கள்ளக்குறிச்சி.
  • திருச்சி.
  • வேலூர்.
  • திருவண்ணாமலை.
  • ஓசூர்.
  • கும்பகோணம்.
  • புதுச்சேரி மாநிலம்

சொந்த ஊர்களில் இருந்து வெளியூர் திரும்ப 805 சிறப்பு பேருந்துகள்

ஆகிய ஊர்களுக்கு ஒவ்வொரு நாளும் 65 அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த பேருந்துகள் மூலம் சொந்த ஊர் சென்ற பொதுமக்கள் மீண்டும் சென்னை உள்ளிட்ட ஊர்களுக்கு திரும்புவதற்கு வசதியாக அனைத்து பகுதிகளில் இருந்தும் ஞாயிற்றுக்கிழமை 805 அரசு சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: அரசியல் கட்சியாக மாறும் வீ த லீடர்ஸ்.. தமிழகத்தில் உண்மையான மாற்று அரசியல் வரும்.. மகளிர் மாநாட்டில் அண்ணாமலை அதிரடி!

Follow Us