Tamil Nadu News Live: தமிழகத்தில் வெளுக்கும் மழை.. இன்று வானிலை எப்படி?
Tamil Nadu Latest News Live Updates in Tamil : தமிழ்நாட்டில் கனமழை பெய்து வருகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் வறட்சி முகத்தை காட்டத்தொடங்கிய இந்நேரத்தில் மழை தொடங்கியுள்ளதால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். இன்றைய வானிலை விவரங்களை விரிவாக பார்க்கலாம்.
LIVE NEWS & UPDATES
-
இங்கெல்லாம் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை செங்கல்பட்டு, சென்னை, கடலூர், ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், நாமக்கல், பெரம்பலூர், சேலம், திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அரியலூர், கோவை, தருமபுரி, மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சை, நீலகிரி, திருவாரூர், தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி, மன்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
-
இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
வங்கக்கடலில் இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
-
26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
தமிழகத்தில் இன்று (அக்.23) 26 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை கொடுத்துள்ளது. அதன்படி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, அரியலூர், கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.
-
3 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்!
தமிழகத்தில் இன்று (அக். 23) கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 23 இன்று கன்னியாகுமரி, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, அரியலூர், கடலூர், விழுப்புரம், திருப்பூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 24 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது. கனமழை காரணமாக சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் வானிலை விவரங்களை அப்டேட்களாக பார்க்கலாம். அதுமட்டுமின்றி, தமிழ்நாடு, இந்தியா, உலகம் என அனைத்து கோண செய்திகளையும் இங்கே பார்க்கலாம்
Published On - Oct 23,2026 7:00 AM