Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
AIADMK

AIADMK

அஇஅதிமுக

அறிஞர் அண்ணாவின் மறைவை தொடர்ந்து, கருணாநிதிக்கு எதிராக மதுரையில் 1972ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி எம்.ஜி.ஆர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை (அதிமுக) தொடங்கினார். கட்சி தொடங்கிய ஐந்து ஆண்டுகளிலேயே எம்.ஜி.ஆர் முதல்வரானார். 1987ஆம் ஆண்டு எம்.ஜிஆர் மறைவை அடுத்து, கட்சி ஜெயலலிதா அணி மற்றும் ஜானகி அணி என இரண்டாக பிரிந்தது. அதன்பிறகு, 1989ஆம் ஆண்டு நடந்த பேரவை தேர்தலில் ஜெயலலிதா அணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றதால், ஒட்டுமொத்த அதிமுகவும் ஜெயலலிதா பக்கம் சென்றது. இதனை அடுத்து, 1991ஆம் ஆண்டு நடந்த பேரவை தேர்தலில் போட்டியிட்டு ஜெயலலிதா முதல்முறையாக முதல்வரானார். அதன்பிறகு, 2001, 2011, 2016ஆம் ஆண்டுகளில் நடந்த பேரவை தேர்தல்களில் வெற்றி பெற்று முதல்வரானார். 2016ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் மறைவை அடுத்து, அதிமுக பிரிவை சந்தித்தது. பல பிரச்னைகளுக்கு மத்தியில், 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தது. தற்போது மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக இருக்கிறது.நாம் இந்த தொகுப்பில் அதிமுக தொடர்பான செய்திகளை காணலாம்.

Read More

ஓபிஎஸ் மீண்டும் அதிமுகவில் இணைவாரா? – எடப்பாடி பழனிசாமியின் பதிலால் பரபரப்பு

EPS clear response to OPS: செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவில் இணைய நான் ரெடி, எடப்பாடி பழனிசாமி மற்றும் டிடிவி தினகரன் ரெடியா என கேள்வி எழுப்பியிரு்தார். அதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

எடப்பாடி பழனிசாமி தயாரா…திடீரென சவால் விட்ட ஓபிஎஸ்..என்ன காரணம்?

O Panneerselvam: அதிமுகவில் இணைய தயாராக உள்ளதாகவும், எங்களை இணைக்க அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தயாராக உள்ளாரா என்று தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு டிடிவி தினகரன் வலியுறுத்த வேண்டும் என்று கூறினார்.

பாஜக – அதிமுக வலுவான கூட்டணி.. திமுகவுக்கு சவாலாக உருவெடுக்கும் என்டிஏ

BJP–AIADMK Alliance : தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் பாஜக - அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி திமுகவுக்கு எதிராக முக்கிய முகமாக மாறி வருகிறது. களத்தில் அக்கட்சி தொண்டர்கள் ஒற்றுமையாக செயலாற்றி வருவது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

த.வெ.க உடன் கூட்டணி அமைக்காதது ஏன்? இது தான் உண்மையான காரணம் – மனம் திறந்த டிடிவி தினகரன்..

TTV Dinakaran Pressmeet: நான் டெல்லிக்கு சென்றபோது கூட, ‘செங்கோட்டையன் உங்கள் நண்பர் தானே, நீங்கள் பேசுங்கள்’ என என்னிடம் கேட்டார்கள். இருப்பினும், நான் அவரை ‘வாருங்கள்’ என்று எப்படி அழைக்க முடியும்? நான் வருவேன் என்று செங்கோட்டையன் நம்பினார் என டிடிவி தினகரன் பேசியுள்ளார்.

தேமுதிக-அதிமுக கூட்டணி உறுதியாகிறது…விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…சீனிவாசன் கொடுத்த அப்டே்!

Dindigul Srinivasan: தேசிய முற்போக்கு திராவிட கழகத்துடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். மேலும், திமுக, தவெகவை கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமியின் மற்றொரு தேர்தல் வாக்குறுதி…என்ன அது!

Edappadi k Palaniswami: வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவுடன் ஜல்லிக் கட்டு போட்டியில் பங்கேற்று எதிர்பாரதவிதமாக மரணம் அடையும் மாடுபிடி வீரருக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி மற்றும் அரசு சார்பில் இன்ஸ்சூரன்ஸ் வழங்கப்படும் என்று எடப்பாடி தெரிவித்தார்.

“என்னுடன் இருப்பவர்களை அமைச்சர்களாக பார்க்க ஆசை”.. டிடிவி தினகரன் கொடுத்த ஷாக்!!

TTV Dhinakaran not contesting in election: ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதாவின் உண்மை தொண்டர். அவர் தர்மயுத்தம் துவங்காமல் இருந்தால் சசிகலா தலைமையில், மீண்டும் முதலமைச்சராக வந்திருப்பார் இது உங்களுக்கே தெரியும். ஓ.பன்னீர்செல்வத்திற்கு சில தர்ம சங்கடங்கள் உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

“வாயிலேயே வடை சுடுகிறார் விஜய்”.. செல்லூர் ராஜூ கடும் விமர்சனம்!!

இத்தனை நாட்கள் தவெக குறித்து விமர்சிப்பதை தவிர்த்து வந்த அதிமுக, தற்போது தீவிரமாக விமர்சிக்க தொடங்கியுள்ளது. நேற்று நடந்த தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் விஜய் அதிமுகவை விமர்சிக்க, அதிமுகவும் பதிலுக்கு பனையூர் பண்ணையார் என விஜய்யை விமர்ச்சித்து வருகிறது. அதோடு, கரூர் விவகாரத்தை குறிப்பிட்டும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இது தான் திமுகவின் கடைசி தேர்தல் – கோவை சத்யன் அதிரடி

முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிமுக மீது கடும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். இந்த நிலையில் இது குறித்து பேசிய அதிமுகவின் தேசிய செய்தித் தொடர்பாள் கோவை சத்யன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், எங்கள் தலைவர் எடப்பாடி பழிசாமி சொல்வது போல இது தான் திமுகவின் கடைசி தேர்தல் என்றார்.

கரூர் சம்பவத்துக்கு நீங்களும் காரணம்… முதல்வரின் வீட்டில் கைகட்டி நின்றீர்கள்.. விஜய் மீது அதிமுக கடும் குற்றச்சாட்டு

தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய விஜய் அதிமுகவை ஊழல் கட்சி என விமர்சித்திருந்த நிலையில், அதிமுக விஜய் மீது பரபரப்பு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது. இது தொடர்பாக அதிமுக ஐடி விங் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கரூர் சம்பவத்துக்கு விஜய்யும் ஒரு காரணம் என தெரிவித்துள்ளது.

2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியில்லை.. டிடிவி தினகரனின் அதிரடி ட்விஸ்ட்..

TTV Dinakaran: னியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், டிடிவி தினகரன் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார். இது பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், “திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற பொறுப்பு உங்களிடம் இருக்கிறது. நீங்கள் சண்டை போட்டுக் கொண்டால் என்ன செய்வது?” என அவர்கள் கேட்டபோது, அதற்கான பதில் தன்னிடம் இல்லை என்றும் கூறினார்.

170 தொகுதிகளில் அதிமுக போட்டி?.. விறுவிறுக்கும் வேட்பாளர்கள் தேர்வு..

AIADMK Candidate selection; இந்த நேர்காணலின்போது, ​​வேட்பாளர்களிடம் அவர்களின் தொகுதியில் உள்ள செல்வாக்கு, கட்சிக்கு அவர்கள் செய்த பணிகள் மற்றும் திமுக குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன. அரசுக்கு எதிரான தொகுதிகளில் உள்ள கள நிலவரம் குறித்து எடப்பாடி பழனிசாமி நேரடியாகக் கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது.

ஓபிஎஸ் ஆதரவாளர்..! எடப்பாடி பழனிசாமி முன்னிலை அதிமுகவில் இணைந்தார் தர்மர்!

ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரான ஆர். தர்மர் ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் அஇஅதிமுகவில் இணைந்தார். அதனை தொடர்ந்து, அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தர்மர் தலைமையில் ஓபிஎஸ் ஆதரவாளர்களும் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

அதிமுகவில் இணைகிறார் தர்மர் எம்.பி…காலியாகும் ஓபிஎஸ் கூடாரம்!

Dharmar MP: அதிமுக உரிமை மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவரான மாநிலங்களவை உறுப்பினர் தர்மர் எம். பி. அவரிடம் இருந்து விலகி இன்று மாலை எடப்பாடி கே பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைய உள்ளார்.

“மீண்டும் சகோதரர்களாக இணைந்துவிட்டோம்”.. இபிஎஸ், டிடிவி தினகரன் கூட்டாக பேட்டி!!

இருவரும் ஒப்புதல் அளித்த பிறகுதான் இந்தக் கூட்டணி அமைக்கப்பட்டது. இதில் யாருக்கும் எந்த மிரட்டலோ, அழுத்தமோ இல்லை. ஏப்ரல் 2017-க்கு முன்பு இருந்ததைப் போலவே, நாங்கள் சகோதரர்களாக மீண்டும் இணைந்துள்ளோம். எங்களுக்குள் எந்தப் பிரச்சனையும் இல்லை என டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி கூட்டாக கூறியுள்ளனர்.