தமிழர்களின் பாரம்பரிய உடையான பட்டு வேட்டி சட்டையில் திருச்சி வந்து இறங்கிய பிரதமர் மோடி..
இந்த நிலையில் மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இந்த பொதுக்கூட்டம் திருச்சி பஞ்சப்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், பாரிவேந்தர் (பச்சமுத்து) உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் மேடையில் பங்கேற்கின்றனர்.
திருச்சி, மார்ச் 11, 2026: 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் களம் பரபரப்பாகத் தொடங்கியுள்ளது. குறிப்பாக பாரதிய ஜனதா கட்சி தரப்பில் மாநில மாநாடுகள் தமிழகத்தில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மார்ச் 11, 2026 ஆகிய இன்று திருச்சி பஞ்சப்பூர் அருகே 30 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார். கொச்சியில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு வந்த பிரதமர், தமிழர்களின் பாரம்பரிய உடையான பட்டு வேட்டி–சட்டையுடன் வருகை தந்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணி:
2026 சட்டமன்றத் தேர்தலை எடுத்துக் கொண்டால், தமிழகத்தில் பாஜக எப்படியாவது அதிக இடங்களில் கால் பதிக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள பாரதிய ஜனதா கட்சி கிட்டத்தட்ட 35 இடங்கள் கேட்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 21 இடங்கள் வழங்கப்பட்ட நிலையில், அதில் நான்கு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த முறை அந்த எண்ணிக்கையை இரட்டிப்பாக அதிகரித்து கேட்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் அதிமுக தரப்பில் பாஜக கேட்கும் அளவிற்கு இடங்கள் ஒதுக்கப்படுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதற்காக தொடர்ந்து பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
திருச்சியில் நடக்கும் தே.ஜ கூட்டணி பொதுக்கூட்டம்:
சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற இருக்கக்கூடிய சூழலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த மாதம் திருவள்ளூரிலும், கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரையிலும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. அந்த கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்த நிலையில் மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இந்த பொதுக்கூட்டம் திருச்சி பஞ்சப்பூரில் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், பாரிவேந்தர் (பச்சமுத்து) உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் மேடையில் பங்கேற்கின்றனர்.
பட்டு வேட்டி சட்டையுடன் வந்து இறங்கிய பிரதமர் மோடி:
இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் கடந்த சில தினங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பஞ்சப்பூரில் 30 ஏக்கர் பரப்பளவில் இந்த மாநாடு நடைபெறுகிறது. சுமார் 76 ஆயிரம் தொண்டர்கள் அமரும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் இந்த பொதுக்கூட்டத்திற்கு சுமார் ஏழு லட்சம் தொண்டர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக கொச்சியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி திருச்சிக்கு வருகை தந்தார். தமிழர்களின் பாரம்பரிய உடையான பட்டு வேட்டி, சட்டையுடன் அவர் வருகை தந்தது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து பல மத்திய அரசுத் திட்டங்களை தொடங்கி வைத்தார். தமிழகத்திற்கு முக்கியமாக புதிய ஐந்து ரயில் சேவைகளையும் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.