AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தஞ்சைக்கு பதிலாக செங்கிப்பட்டியில் விசாரணை? மறுப்பு தெரிவித்த உதயநிதி

தஞ்சையில் திமுகவினரின் போராட்டம் வலுத்ததால் செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அழைத்து வரப்பட்டுள்ளார். இந்த நிலையில் புகார் பதிவான காவல் நிலையத்திற்கே விசாரணைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் எனக் கூறி, வேனில் இருந்து கீழே இறங்க அவர் மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தஞ்சைக்கு பதிலாக செங்கிப்பட்டியில் விசாரணை? மறுப்பு தெரிவித்த உதயநிதி
உதயநிதி ஸ்டாலின்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 04 Aug 2026 19:29 PM IST

தஞ்சாவூர், ஆகஸ்ட் 4 : தஞ்சாவூரில் திமுகவினரின் போராட்டம் வலுத்ததால் செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அழைத்து வரப்பட்டுள்ளார்.   இந்த நிலையில் புகார் பதிவான காவல் நிலையத்திற்கே விசாரணைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் எனக் கூறி, வேனில் இருந்து கீழே இறங்க அவர் மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தஞ்சைக்கு பதிலாக செங்கிப்பட்டியில் விசாரணை?

தஞ்சையில் திமுகவின் போராட்டம் வலுத்ததால், செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி அழைத்து வரப்பட்டார். இந்த நிலையில் தன்னை சம்பந்தப்பட்ட காவல் நிலையம் கூட்டிச் செல்லுமாறு, வேனில் இருந்து இறங்க அவர் மறுப்பு. இதனால் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க : தவெக எம்எல்ஏ மீதும் நடவடிக்கை தேவை, எந்த கட்சியாக இருந்தாலும் நடவடிக்கை தேவை – பெ.சண்முகம் பரபரப்பு கருத்து

இந்த நிலையில், போலீசாரின் நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு வேனில் இருந்து இறங்கி செங்கிப்பட்டி காவல் நிலையத்தின் உள்ளே எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சென்றார், தஞ்சை நகரில் திமுக போராட்டம் வலுத்ததால் போலீசார் அங்கு செல்ல முடியாமல், செங்கிப்பட்டிக்கு வந்துள்ளனர். போலீசாரின் நீண்ட பேச்சு வார்த்தைக்கு பின் செங்கிப்பட்டி காவல்நிலையத்திற்குள் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார். இதனால் சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

இதற்கிடையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு தஞ்சை செங்கிபட்டி காவல்நிலையத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் காவல்நிலையத்திற்கு வெளியே திமுகவினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தஞ்சாவூரில் காவிரி விவகாரம் தொடர்பாக திமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதல்வர் விஜய் குறித்து சர்ச்சையாக பேசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து உதயநிதி ஸ்டாலின் மீது தவெக மகளிரணி நிர்வாகி ஒருவர் புகார் அளித்தார். அந்த புகார் அடிப்படையில் உதயநிதி ஸ்டாலினை அவரின் வீட்டிற்கே சென்று போலீசார் ஆகஸ்ட் 4, 2026 இன்று காலை கைது செய்தனர்.

அவரை கைது செய்து தஞ்சாவூர் அழைத்து சென்றனர். இதற்கிடையில் திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில் இன்றைக்குள் உதயநிதி ஸ்டாலினிடம் விசாரணை நடத்திய பிறகு அவரை விடுதலை செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது இதனிடையே உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து தமிழ்நாடு முழுக்க திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிக்க : உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும் – உயர்நீதிமன்றம் உத்தரவு

குறிப்பாக உதயநிதி ஸ்டாலினை அழைத்து செல்லும் வழிநெடுக திமுகவினர் குவிந்தனர். இதனையடுத்து மதியம் 2 மணியளவில் விழுப்புரம் அருகே ஒலப்பூர் காவல் நிலையத்தில் உதயநிதி ஸ்டாலின் உணவு சாப்பிட்டார். தொடர்ந்து 4 மணியளவில் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை போலீசார் வாகனம் கடந்து சென்றது. திருச்சி சென்று அங்கிருந்து தஞ்சாவூர் செல்ல காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். கிட்டத்தட்ட 8 மணி நேரத்திற்கும் அதிகமாக உதயநிதி ஸ்டாலின் வேனிலேயே பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தஞ்சையில் திமுகவினர் குவிந்து வருவதைக் காரணம் காட்டி 5 மாவட்ட எஸ்பிகள் தஞ்சாவூருக்கு வரவழைக்கப்பட்டனர். இருப்பினும் பாதுகாப்பு காரணங்களுக்காக தஞ்சாவூருக்கு பதிலாக அவரிடம் செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Follow Us