தவெக எம்எல்ஏ மீதும் நடவடிக்கை தேவை, எந்த கட்சியாக இருந்தாலும் நடவடிக்கை தேவை – பெ.சண்முகம் பரபரப்பு கருத்து
எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டிருப்பது தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக பேசிய பெ.சண்முகம், ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ மீதும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டிருப்பது தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனை கண்டித்து திமுகவினர் மாநிலம் முழுவதும் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆகஸ்ட் 5, 2026 நாளை தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் கைது உள்நோக்கம் கொண்டது என எதிர்கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ மீதும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் தெரிவிததுள்ளார்
பெ.சண்முகம் பரபரப்பு கருத்து
இது தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ மீதும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். மேலும் எந்த கட்சியினராக இருந்தாலும் பெண்களை பாலியல் ரீதியாக பேசினால் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் . மேலும் ஆகஸ்ட் 5, 2026 நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் எதிர்கட்சித் தலைவரின் பங்களிப்பு அவசியம். சட்டமன்றக் கூட்டத்தொடரை கவனத்தில் கொண்டு அரசு செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.
இதையும் படிக்க : எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி மீது என்னென்ன பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு… முழு விவரம்!




மற்றொரு கூட்டணி கட்சித் தலைவரான விசிக பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவனும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பதிவில், அண்மையில் திமுக சார்பில் காவிரி நீர் உரிமைக்காக தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ‘இரட்டுற மொழிதல்’ என்னும் வகையில் எள்ளி நகையாடும் கருத்தொன்றைக் கூறியிருக்கிறார்.
எதிர்க்கட்சிகளின் மீது பொய்வழக்குப் போடுவதிலேயே முதலமைச்சரின் கவனம் இருக்கிறது என்று அவர் சொல்லியபோது, ஆங்கே திரண்டிருந்தவர்கள் பிரபல நடிகை ஒருவரின் பெயரைச் சொல்லிக் கூச்சலிடுகின்றனர். அப்போது அவர் கிண்டலாகப் பேசும் முனைப்பில் தவறான பொருள்படும்படி ஒரு கருத்தைப் பேசியுள்ளார். இது ஆங்கில ஊடகங்களில் விவாதிக்கும் அளவுக்கு – கண்டிக்கும் அளவுக்கு தேசிய அளவிலான பிரச்னையாக மாறியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் என்கிற பொறுப்பு வாய்ந்த இடத்தில் இருப்பவர் இதுபோல இரட்டை பொருள் தரும் ‘எள்ளல் நடையில்’ பேசும் முறையைத் தவிர்த்திருக்க வேண்டும். ஒரு பெண்ணைக் குறித்து இழிவாகப் பேசும் இத்தகைய அணுகுமுறை அவரது அரசியல் தகுதிக்குப் பொருத்தமானதில்லை. நாகரிக அரசியலுக்கு ஏற்புடையதல்ல. சூழ்ந்திருப்பவர்களின் சுவைக்கேற்ப சொல்லாடல் செய்வது என்கிற உந்துதலால் உணர்ச்சிவயப்பட்ட – தன்னிலை மறந்த அணுகுமுறையைக் கைவிட வேண்டும். பெண்மையைக் கொச்சைப்படுத்தும் வகையில் புரிதலை ஏற்படுத்திய அந்த அணுகுமுறை கண்டிக்கத் தக்கதாகும்.
இதையும் படிக்க : இந்த கைது நடவடிக்கையை நான் காமெடியாகத்தான் பார்க்கிறேன் – உதயநிதி ஸ்டாலின்
மேலும் ஆகஸ்ட் 5, 2026 நாளை சட்டமன்றம் கூடும் சூழ்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பிலிருப்பவரைச் சிறைப்படுத்துவதைத் தவிர்ப்பது ஆளுங்கட்சியின் மீதான நன்மதிப்பை உயர்த்தும். தற்போதைய நிலையில், காவிரிநீர் உரிமைக்காக அனைத்துக் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் என யாவரும் இணைந்து குரல் கொடுப்பதற்கும். இந்திய ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்கும் இது ஏதுவாக அமையும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.