மதுராந்தகத்தில் ஆட்டோ ஓட்டி, டீ போட்டுக் கொடுத்து வாக்கு சேகரித்த தவெக வேட்பாளர்!
Maduranthakam TVK Candidate | மதுராந்தகத்திற்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தவெக சார்பில் மரகதம் குமரவேல் போட்டியிடுகிறார். இதற்காக தொடர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் அவர், இன்று ஆட்டோ ஓட்டியும், பொதுமக்களுக்கு டீ போட்டுக் கொடுத்தும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மதுராந்தகம், செப்டம்வர் 21 : மதுராந்தகம் (Maduranthakam) இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற தமிழக வெற்றிக் கழக (TVK – Tamilaga Vetri Kazhagam) வேட்பாளர் ஒருவர், ஆட்டோ ஓட்டியும், பொதுமக்களுக்கு டீ போட்டுக் கொடுத்தும் வாக்குகளை சேகரித்தார். இடைத்தேர்தலுக்காக தொடர்ந்து 6வது நாளாக இன்று (செப்டம்பர் 21, 2026) வாக்கு சேகரித்த அவர், இதனை செய்துள்ளார். இந்த நிலையில், வித்தியாசமான முறையில் தவெக வேட்பாளர் வாக்கு சேகரித்தது குறித்து விரிவாக பார்க்கலாம்.
6வது நாளாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தவெக வேட்பாளர்
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு, வேறு கட்சியை சில சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதன் காரணமாக சில தொகுதிகள் காலியாகின. இந்த நிலையில் தான், தற்போது காலியாக உள்ள தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் காரணமாக வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் இறங்கியுள்ளனர்.
இதையும் படிங்க : மகளிருக்கான வெற்றி பயணம் திட்டம்.. எப்போது தொடங்குகிறது தெரியுமா? வெளியான சூப்பர் அறிவிப்பு!




டீ போட்டு கொடுத்து, ஆட்டோ ஓட்டி வாக்கு சேகரிப்பு
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் போட்டியிட உள்ளார். இதன் காரணமாக அவர் கடந்த சில நாட்களாகவே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், இன்று 6வது நாளாக அவர் மதுராந்தகம் தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திருமேற்கண்டிகை, கடமலைப்புதூர், தொழுப்பேடு, ஆத்தூர், வில்லியம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற அவர், திறந்த வாகனத்தில் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இதையும் படிங்க : பெற்றோர்களே கவனம்! குழந்தைகளை அச்சுறுத்தும் உண்ணிக் காய்ச்சல்: தப்புவது எப்படி?
மலர் தூவி உற்சாக வரவேற்பு
தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த மரகதம் குமரவேல், கடமலைப்புத்தூர் பகுதிக்கு வாக்கு சேகரிக்க வந்தபோது, அந்த பகுதி மக்கள் அவரை ரோஜா மலர்களை தூவி மிகவும் உற்சாகமாக வரவேற்றனர். அதனை தொடர்ந்து அருகில் இருந்த ஆட்டோ நிறுத்தத்திற்கு சென்ற அவர், ஆட்டோ ஓட்டி வாக்கு சேகரித்தார். பிறகு, அருகில் இருந்த டீக்கடைக்கு சென்ற அவர், பொதுமக்களுக்கு டீ போட்டுக்கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.