AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“ஒருத்தரையும் விடாதீங்க!”.. ஜெம் வீரமணி வழக்கில் களத்தில் இறங்கிய முதல்வர் விஜய்.. அதிரடி உத்தரவு!!..

Gem Veeramani Case Update: தொழிலதிபர் ஜெம் வீரமணி மீதான வழக்கில் கடந்த 3 நாட்களில் 2 முறை தமிழக முதலமைச்சர் விஜய் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தியுள்ளார். இவ்வழக்கில் தொடர்புடைய யாருக்கும் விலக்கு அளிக்காமல், தவறு செய்த அனைவர் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கக் காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்கி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

“ஒருத்தரையும் விடாதீங்க!”.. ஜெம் வீரமணி வழக்கில் களத்தில் இறங்கிய முதல்வர் விஜய்.. அதிரடி உத்தரவு!!..
முதல்வர் விஜய், ஜெம் வீரமணி
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 21 Sep 2026 12:59 PM IST

சென்னை, செப்.21: தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஜெம் வீரமணி மீதான சட்டவிரோதச் செயல்கள் மற்றும் பாலியல் வழக்குகள் தொடர்பான விசாரணை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. பழமையான இந்த வழக்கின் தீவிரத் தன்மையைக் கருத்தில் கொண்டு, வழக்கை நேர்மையாகவும் விரைவாகவும் கொண்டு செல்லத் தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தச் சூழலில், கடந்த மூன்று நாட்களில் மட்டும் இரண்டு முறை காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் நேரில் ஆலோசனை நடத்தி, வழக்கின் தற்போதைய நிலவரங்களை விரிவாகக் கேட்டறிந்து முக்கிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார்.

இதையும் படிக்க: “சட்டப்படி தவறை நிரூபித்தால் வரவேற்பேன்!”.. ஸ்ரீரங்கம் கோவில் நில விவகாரத்தில் சேகர்பாபு விளக்கம்!!

ஜெம் வீரமணி வழக்கின் பின்னணி:

ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் நிறுவனரான 84 வயதான தொழிலதிபர் வீரமணி மீது, சிறுமிகள் மற்றும் பெண்களைத் தவறான வழியில் பயன்படுத்தியது தொடர்பாகவும், அதில் ஒரு பெண் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது தொடர்பாககடந்த 2018 ஆம் ஆண்டே வீடியோ ஆதாரங்களுடன் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டும், அப்போது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் வழக்கு மூடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மீண்டும் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு, கடந்த ஆகஸ்ட் மாதம் தொழிலதிபர் ஜெம் வீரமணி மற்றும் அவரது கூட்டாளிகளான சாந்தி, சைமன் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர்.

முதலமைச்சரின் தீவிர ஆலோசனை:

கடந்த வெள்ளிக்கிழமை அன்று தமிழக டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையர் மற்றும் சட்டஒழுங்கு ஏடிஜிபி ஆகிய உயர்மட்ட அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் விரிவான ஆலோசனை நடத்தினார். கடந்த 2018-ல் அளிக்கப்பட்ட புகாரின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை, அப்போது பொறுப்பிலிருந்த அதிகாரிகள் யார், வழக்கு ஏன் மூடப்பட்டது என்பது குறித்த விவரங்களை முதலமைச்சர் கேட்டறிந்தார். மேலும், தற்போது கைது செய்யப்பட்டுள்ள மூவரைத் தவிர, வீரமணியுடன் தொடர்பிலிருந்த மற்ற நபர்கள் யார் என்பதையும் கண்டறியுமாறு அறிவுறுத்தினார்.

இதையும் படிக்க: “அண்ணாமலையிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை!”.. முதல்வர் வெளிநாடு பயண விமர்சனத்திற்கு அமைச்சர் மரிய வில்சன் பதிலடி!

காவல்துறைக்கு முழு சுதந்திரம்:

காவலில் எடுக்கப்பட்டு ஜெம் வீரமணியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல முக்கிய ஆதாரங்கள் சிக்கியுள்ள நிலையில், அடுத்து சாந்தி மற்றும் சைமன் ஆகியோரையும் காவலில் எடுத்து விசாரிக்கப் போலீசார் நீதிமன்றத்தை அணுக உள்ளனர். இந்த வழக்கில் முழு சுதந்திரத்துடன் செயல்படக் காவல்துறைக்கு அதிகாரமளித்துள்ள முதலமைச்சர் விஜய், தவறு செய்தவர்கள் எவ்வளவு செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தாலும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்திச் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளார்.

Follow Us