மேக் புக்கில் அறிமுகம் செய்யப்பட்ட இன்ஸ்டாகிராம் எடிட்ஸ்.. இத்தனை சிறப்பு அம்சங்களா?
Instagram Edits on MacBook | இன்ஸ்டாகிராம் பயனர்களின் வசதிக்காக தொடர்ந்து பல்வேறு புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், இன்ஸ்டாகிராம் எடிட்ஸ் அம்சம் மேக் புக்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அம்சத்தின் சிறப்புகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
தற்போது சமூக ஊடகங்களில் (Social Media) ஒரு வீடியோவை பதிவிட வேண்டும் என்றாலும் கூட எடிட்டிங் (Editing) செய்யாமல் யாரும் பதிவிடுவதில்லை. அந்த அளவு எடிட்டிங் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ஒரு சிக்கலான இன்ஸ்டகிராம் ரீல்ஸை (Instagram Reels) மொபைல் போனில் எடிட் செய்வது மிகவும் சிரமமான ஒன்றாக இருக்கும். பல வீடியோக்களை ஒன்றாக இணைப்பது, ஆடியோ திருத்தம் செய்வது, ஒரு வீடியோவுக்கும் மற்றொரு வீடியோவுக்குமான இணைப்பை சரியாக வைப்பது உள்ளிட்ட சிக்கல்கள் அனைத்தும் உள்ளது.
மேக் புக்கில் அறிமுகம் செய்யப்பட்ட இன்ஸ்டாகிராம் எடிட்ஸ்
மொபைல் போன்கள் மூலம் வீடியோ எடிட் செய்வது இத்தகைய சிக்கலான விஷயமாக உள்ளதன் காரணமாக தான், இன்ஸ்டாகிராமின் எடிட்ஸ் (Instagram Edits) அம்சம் மேக் புக்கில் (Mac Book) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலி மேக் புக் பயனர்களுக்கு முற்றிலும் இலவசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலில் டெஸ்க்டாப்பில் வீடியோ எடிட் செய்வதற்கு தேவையான சிறப்பு அம்சங்கள் அனைத்தும் இடம்பெற்றுள்ளன.
இதையும் படிங்க : சொமேட்டோவில் இனி பிடித்த கடைகளில் ஆர்டர் செய்யலாம்.. தூரம் ஒரு Matter இல்லை.. வந்தது புதிய அம்சம்!




டெஸ்க்டாப் தரத்தில் எடிட்டிங் அம்சங்கள்
பயனர்கள் தங்களது வீடியோவை சிறந்த தரம் கொண்டதாக மாற்றும் வகையில் இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலியில் Multi – Track Timeline அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலி ஒரே நேரத்தில் பல லேயர்களை கொண்ட வீடியோ மற்றும் ஆடியோக்களை எடிட் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வீடியோ எடிட் செய்யும் நபர்கள் Transition செய்ய Keyframes-களும் இந்த செயலியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ChatGPT மூலம் உங்கள் புகைப்படத்தை GIF ஆக மாற்றலாம்.. எப்படி?
கலர் கிரேடிட் அம்சத்துடன் அறிமுகம் செய்யப்பட்ட செயலி
எடிட் செய்யப்படும் வீடியோக்கள் சிறப்பானதாக இருக்கும் வகையில், இன்ஸ்டாகிராம் Advanced Colour Grading டூல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த செயலியில் Colour Wheels, Tone Curves மற்றும் Long Conversions ஆகிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. வீடிடோ எடிட்டிங்கை மேலும் விரைவானதாக மாற்றும் வகையில் இந்த செயலியில் கீபோர்டு ஷார்கட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த அம்சங்களை பயன்படுத்தி பயனர்கள் மிக விரைவாகவும், எளிதாகவும் தங்களது வீடியோக்களை எடிட் செய்துக்கொள்ள முடியும். இந்த புதிய செயலி பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.