AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஒரே நாளில் ரூ. 45 உயர்ந்த வெள்ளி விலை… மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம்! இன்றைய நிலவரம் என்ன?

Gold Price: அக்டோபர் மாதத்தில் தொடர்ந்து சரிவைச் சந்தித்த தங்கம் விலை, ஒரு கிராம் ரூ.13,000க்கும் கீழ் குறைந்து விற்பனையானது. இதனால் நகை வாங்குவோர் சற்று நிம்மதியடைந்தனர். ஆனால், நவம்பர் மாதம் தொடங்கியதில் இருந்து தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.

ஒரே நாளில் ரூ. 45 உயர்ந்த வெள்ளி விலை… மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம்! இன்றைய நிலவரம் என்ன?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 07 Nov 2026 11:02 AM IST

நவம்பர் 7, 2026: சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது. நவம்பர் மாதம் தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் நிலையில், நேற்று அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, வெள்ளி விலை ஒரே நாளில் கிராமுக்கு ரூ.45 உயர்ந்திருப்பது நகை வாங்குவோர் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அக்டோபர் மாதத்தில் தொடர்ந்து சரிவைச் சந்தித்த தங்கம் விலை, ஒரு கிராம் ரூ.13,000க்கும் கீழ் குறைந்து விற்பனையானது. இதனால் நகை வாங்குவோர் சற்று நிம்மதியடைந்தனர். ஆனால், நவம்பர் மாதம் தொடங்கியதில் இருந்து தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.

சென்னையில் இன்றைய தங்கம் விலை

நவம்பர் 7ஆம் தேதியான இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.160 அதிகரித்துள்ளது.

  • 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் – ரூ.13,160
  • ஒரு சவரன் (8 கிராம்) – ரூ.1,05,280
  • 24 கேரட் தங்கம் ஒரு கிராம் – ரூ.14,356
  • 24 கேரட் தங்கம் ஒரு சவரன் – ரூ.1,14,848

வெள்ளி விலை ஒரே நாளில் ரூ.45 உயர்வு!

தங்கத்தைவிட வெள்ளி விலையில் ஏற்பட்டுள்ள அதிரடி உயர்வு கவனம் பெற்றுள்ளது. கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட வெள்ளி விலை இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.45 உயர்ந்துள்ளது.

  • ஒரு கிராம் வெள்ளி – ரூ.250
  • ஒரு கிலோ வெள்ளி – ரூ.2,50,000

வெள்ளி விலை திடீரென உயர்ந்திருப்பது நகை வாங்கத் திட்டமிட்டுள்ள பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கத்தில் முதலீடு செய்வது லாபகரமானதா?

தங்கம் என்பது ஆபரணமாக மட்டுமின்றி நீண்டகால முதலீட்டுக்கான ஒரு முக்கியமான சொத்தாகவும் பார்க்கப்படுகிறது. பணவீக்கம் அதிகரிக்கும் காலங்களிலும், பொருளாதார மற்றும் சர்வதேச அரசியல் நிச்சயமற்ற சூழல்களிலும் தங்கத்தின் மீதான முதலீட்டு ஆர்வம் அதிகரிப்பது வழக்கம்.

மேலும் படிக்க: இனி 4 நாமினிகள் வரை நியமிக்கலாம்.. ஆர்பிஐ எடுத்த முக்கிய முடிவு!

தங்கத்தில் முதலீடு செய்வதற்கு முன்பு கவனிக்க வேண்டியவை

தங்கத்தின் விலை எப்போதும் உயர்ந்துகொண்டே இருக்கும் என்று உறுதியாகக் கூற முடியாது. சர்வதேச சந்தை விலை, அமெரிக்க டாலரின் மதிப்பு, வட்டி விகிதங்கள், மத்திய வங்கிகளின் தங்கக் கொள்முதல் மற்றும் புவிசார் அரசியல் சூழல்கள் ஆகியவை தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

மேலும் படிக்க: உச்சத்தில் தங்கம் விலை.. இந்த தீபாவளிக்கு இந்தியர்கள் எப்படி தங்கம் வாங்குகின்றனர்?

எனவே, ஒரே நேரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்வதைவிட, தங்களது நிதிநிலைக்கு ஏற்ப படிப்படியாக முதலீடு செய்வது குறித்து பரிசீலிக்கலாம். மேலும், முதலீட்டின் ஒரு பகுதியாக மட்டுமே தங்கத்தை வைத்திருப்பதும், பங்குகள், கடன் பத்திரங்கள் உள்ளிட்ட பிற முதலீடுகளுடன் சமநிலைப்படுத்துவதும் முக்கியம். தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து மாறக்கூடியவை என்பதால், வாங்குவதற்கு முன்பு அன்றைய விலையையும் கூடுதல் கட்டணங்களையும் சரிபார்ப்பது அவசியம்.

 

Follow Us