Gold Price: நகை பிரியர்களுக்கு டிவிஸ்ட் கொடுத்த தங்கம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
Gold Rate In Chennai: சென்னையில் இன்று (நவம்பர் 6) ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கம் ரூ.13,385-க்கும், ஒரு சவரன் ரூ.1,07,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 24 கேரட் தூய தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.14,602-க்கும், ஒரு சவரன் ரூ.1,16,816-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நவமப்ர் 6, 2026: தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் நிலையில், நவம்பர் மாதம் தொடங்கியதில் இருந்து மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, அக்டோபர் மாதத்தில் தங்கம் விலை கடும் சரிவைச் சந்தித்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.13,000-க்கும் கீழ் விற்பனை செய்யப்பட்ட நிலையில், நவம்பர் மாதம் தொடங்கியதிலிருந்து தொடர்ச்சியாக விலை அதிகரித்து வருகிறது.
இந்தச் சூழலில், நவம்பர் 6ஆம் தேதியான இன்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் மாற்றமின்றி தொடர்கிறது. தீபாவளி பண்டிகை நவம்பர் 8ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், தங்கம் விலை மீண்டும் உயர்ந்து வருவது நகை வாங்கத் திட்டமிட்டுள்ள பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் இன்று (நவம்பர் 6) ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கம் ரூ.13,385-க்கும், ஒரு சவரன் ரூ.1,07,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 24 கேரட் தூய தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.14,602-க்கும், ஒரு சவரன் ரூ.1,16,816-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியைப் பொறுத்தவரையில், ஒரு கிராம் ரூ.210-க்கும், ஒரு கிலோ ரூ.2,10,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இன்று தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டின் விலையிலும் எந்த மாற்றமும் இல்லை.
மேலும் படிக்க: இனி 4 நாமினிகள் வரை நியமிக்கலாம்.. ஆர்பிஐ எடுத்த முக்கிய முடிவு!
திடீரென உயரத் தொடங்கிய தங்கம் விலை… என்ன காரணம்?
சர்வதேச சந்தையில் தங்கம் விலை சமீபத்தில் கடுமையான ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தது. குறிப்பாக, அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடைந்தது, அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதம் தொடர்பான எதிர்பார்ப்புகள் மற்றும் முதலீட்டாளர்கள் லாப நோக்கில் தங்கத்தை விற்பனை செய்தது உள்ளிட்ட காரணங்களால் அக்டோபர் மாதத்தில் தங்கம் விலை சரிவைச் சந்தித்தது.
ஆனால், தற்போது மீண்டும் தங்கம் விலை உயரத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, அமெரிக்க டாலரின் மதிப்பு சரிந்ததும், அமெரிக்க அரசுப் பத்திரங்களின் வருவாய் குறைந்ததும் தங்கத்தின் மீதான முதலீட்டு ஆர்வத்தை அதிகரித்துள்ளன. அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து சந்தையில் ஏற்பட்ட மாற்றங்களும் தங்கம் விலை உயர்வுக்கு ஒரு காரணமாக அமைந்துள்ளன. இதனால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை நவம்பர் 5ஆம் தேதி இரண்டு வாரங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது.
மேலும் படிக்க: திடீரென விலை உயரும் தங்கம்.. காரணம் என்ன?.. பின்னணியில் அமெரிக்க டாலர்?
மேலும், உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கத்தை வாங்கி இருப்பு வைப்பதும் நீண்டகால அடிப்படையில் தங்கத்தின் விலைக்கு ஆதரவாக உள்ளது. உலக தங்க கவுன்சிலின் தகவலின்படி, 2026ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் உலக மத்திய வங்கிகள் 321 டன் தங்கத்தை நிகர அளவில் வாங்கியுள்ளன. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தைவிட 40 சதவீதம் அதிகமாகும்.