ரேஷன் கார்டு பயனர்களுக்கு தீபாவளி சூப்பர் அப்டேட்.. என்ன தெரியுமா?
Tamil Nadu Ration Shop Holiday Update | இந்தியா முழுவதும் நவம்பர் 08, 2026 அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பொதுமக்கள் தயாராகி வரும் நிலையில், பொதுமக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இன்னும் இரண்டே நாட்களில் இந்தியாவில் தீபாவளி பண்டிகை (Diwali Festival) கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் தான், கோடிக்கணக்கான மக்கள் தீபாவளி பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாட தயாராகி வருகின்றனர். அரசும் பொதுமக்கள் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் தீபாவளியை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. அந்த வகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு (Tamil Nadu Government) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வெள்ளிக்கிழமைகளில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை
தமிழ்நாட்டில் மொத்தம் சுமார் 35,000-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் (Ration Shops) இயங்கி வருகின்றன. இந்த ரேஷன் கடைகளில் வழக்கமாக மாதத்தின் முதல் மற்றும் 2வது வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்படும். இந்த இரண்டு தினங்களுக்கு பதிலாக ஞாயிற்றுக்கிழமைகளில் ரேஷன் கடைகள் இயங்கும். வேலைக்கு செல்லும் பெரும்பாலான மக்களுக்கு ஞாயிற்றுக் கிழமை ஒருநாள் மட்டும் தான் விடுமுறை வழங்கப்படும் நிலையில், அவர்கள் ரேஷன் பொருட்களை வாங்க ஏதுவாக இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க : மாருதி சொன்ன குட்நியூஸ்.. சக்திவாய்ந்த எஸ்யூவிக்கு நல்ல தள்ளுபடி.. ஜிம்னி சிறப்புகள் என்ன?
இந்த வெள்ளிக்கிழமை ரேஷன் கடைகள் இயங்கும்
ஆனால், இந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 08, 2026) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், பொதுமக்கள் ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு ஏதுவாக வெள்ளிக்கிழமையான இன்று (நவம்பர் 06, 2026) ரேஷன் கடைகள் இயங்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பண்டிகை நேரத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்கவும், மக்கள் எந்தவித சிக்கல்களும் இல்லாமல் ரேஷன் பொருட்களை வாங்கிச் செல்லவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரண்டு நாட்களுக்கு தொடர் விடுமுறை – முக்கிய தகவல்
ஞாயிற்றுக் கிழமைக்கு பதிலாக இன்று ரேஷன் கடைகள் இயங்குவதன் காரணமாக, ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். ஏற்கனவே தமிழகத்தில் திங்கள் கிழமை (நவம்பர் 09, 2026) ரேஷன் கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நவம்பர் 08, 2026 மற்றும் நவம்பர் 09, 2026 என மொத்தம் இரண்டு நாட்கள் ரேஷன் கடைகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட உள்ளது.
இதையும் படிங்க : Gold Price : மீண்டும் ரூ.13,000-க்கு மேல் சென்ற தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.2,280 உயர்வு!
இன்றே ரேஷன் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்
எனவே, ஞாயிற்றுக் கிழமை அல்லது திங்கள் கிழமை ரேஷன் பொருட்களை வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் இன்றே அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்குவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.



