இனி 4 நாமினிகள் வரை நியமிக்கலாம்.. ஆர்பிஐ எடுத்த முக்கிய முடிவு!
Bank Account Nominee Rules | வங்கி கணக்கில் உள்ள பணம் உரிய நபருக்கு பிறகு வாரிசுகளுக்கு சென்று சேர்வதற்காக நாமினி நியமனம் செய்ய வேண்டியது அவசியமாக உள்ளது. இந்த நிலையில், வங்கி கணக்கில் நாமினியை நியமனம் செய்வதற்கான முக்கிய மாற்றத்தை ஆர்பிஐ நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.
ஒவ்வொருவரும் வேலைக்கு செல்வதற்கு பின்னால் ஒரு காரணம் இருக்கும். பெரும்பாலானவர்களுக்கு குடும்பம் தான் இருக்கும். தனது குடும்பம் பொருளாதார சிக்கல்களை எதிர்க்கொள்ள கூடாது என்பதற்காக பலரும் அயராது உழைப்பர். சிலரோ தாங்கள் இறந்த பின்பும் தங்களது குடும்பம் நிதி பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என அதற்கான முயற்சிகளை செய்வர். இவ்வாறு நாம் பாடுபட்டு, உழைத்து சேமிக்கும் பணம் நமது கவனக்குறைவால் நமது குடும்பத்திற்கு கிடைக்காமல் போய்விடும் வாய்ப்பு உள்ளது. எனவே தான் சேமிப்பு, சொத்து ஆகியவற்றுக்கு நாமினி (Nominee) நியமிப்பது அவசியமாக உள்ளது.
வங்கி கணக்கு குறித்த ஆர்பிஐ-ன் முக்கிய நடவடிக்கை
இந்த நிலையில் தான், வங்கி கணக்கிற்கு நாமினியை (Bank Account Nominee) நியமிப்பது தொடர்பாக முக்கிய அறிவிப்பை இந்திய ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank Of India) வெளியிட்டுள்ளது. அதாவது, இனி வங்கி கணக்கில் நான்கு நாமினிகள் வரை நியமனம் செய்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது வாரிசுகளுக்கு சொத்துக்கள் சென்று சேர்வதை உறுதிப்படுத்தும் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது. இந்த நிலையில், ஆர்பிஐ-ன் இந்த முக்கிய நடவடிக்கை குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : இந்தியாவில் தங்கத்தின் தேவை 29% சரிவு.. காரணம் என்ன?.. முழு விவரம் இதோ!
இனி வங்கி கணக்கிற்கு நான்கு நாமினிகள் வரை சேர்க்கலாம்
இதுவரை வங்கி கணக்கிற்கோ அல்லது நிலையான வைப்பு நிதிக்கோ (FD – Fixed Deposit) ஒரே ஒருவரை மட்டுமே நாமினியாக நியமனம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில், அதில் முக்கிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது, வங்கி சட்டங்கள் திருத்த சட்டம் 2025-ன் (Banking Laws Amendment Act 2025) மூலம் வங்கி கணக்குகள் மற்றும் லாக்கர்களில் அதிகபட்சமாக நான்கு நாமினிகள் வரை நியமனம் செய்ய சட்ட ரீதியாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : கேரளாவில் குங்கும பூ வளர்த்து அசத்தும் நபர்.. ஒரு கிராம் ரூ.650!
2025 அக்டோபர் முதல் அமல்
இந்த சட்டம் திருத்தம் 2025 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன் பிறகு அக்டோபர் 28, 2026 அன்று இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட வழிகாட்டுதல்களின் படி, இந்த முறையை வங்கிகள் பின்பற்ற தொடங்கியுள்ளன. இந்த புதிய சட்ட திருத்தம் மூலம் ஒருவர் தனது சொத்துக்கள் யார் யாருக்கு சேர வேண்டும் என்பதை முடிவு செய்து நாமினியாக நியமனம் செய்யலாம். நாமினியில் ஒருவர் உயிரிழந்தாலும், மீதமுள்ளவர்கள் சொத்தை சட்ட ரீதியாக பெற்றுக்கொள்ள முடியும். இதன் மூலம் நாமினி சிக்கலுக்கு ஒரு தீர்வு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.