Gold Price : மீண்டும் ரூ.13,000-க்கு மேல் சென்ற தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.2,280 உயர்வு!
Gold and Silver Price In Chennai Today | சென்னையில் நாளுக்கு நாள் தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று தங்கம் விலை அதிரடி விலை உயர்வை சந்தித்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, நவம்வர் 05 : சென்னையில் தங்கம் விலை (Gold Price) கடந்த இரண்டு நாட்களாக தொடர் உயர்வை சந்தித்து வந்த நிலையில், இன்று (நவம்பர் 05, 2026) மூன்றாவது நாளாக உயர்வை சந்தித்துள்ளது. அதாவது, இன்று ஒரே நாளில் தங்கம் சுமார் ரூ.2,280 உயர்வை சந்தித்து, மீண்டும் ரூ.13,000-க்கு மேல் சென்றுள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Silver Price) நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
மீண்டும் விலை உயர்வை சந்திக்க தொடங்கிய தங்கம்
சென்னையில் செப்டம்பர் மாத இறுதியில் தங்கம் விலை கடும் சரிவை சந்திக்க தொடங்கியது. அதன் காரணமாக அதுவரை ரூ.13,000-க்கு கீழ் செல்லாமல் இருந்து வந்த ஒரு கிராம் தங்கம் ரூ.13,000-க்கு கீழ் சென்றது. இந்த நிலையில் தான், இன்று ஒரே நாளில் அதிரடி விலை உயர்வை சந்தித்து மீண்டும் ரூ.13,000-க்கு மேல் ஒரு கிராம் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க : 2025 தீபாவளி.. ரூ.1 லட்சத்திற்கு தங்கத்தில் முதலீடு செய்திருந்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.285 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,385-க்கும், சவரனுக்கு ரூ.2,280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,07,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.14,602-க்கும், ஒரு சவரன் ரூ.1,16,816-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் ஒரு கிராம் ரூ.210-க்கும், ஒரு கிலோ ரூ.2,10,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் திடீர் விலை உயர்வுக்கு காரணம் என்ன?
அமெரிக்காவில் மிட்டேரம் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில் டிரம்ப் தலைமையிலான குடியரசு கட்சி கடும் தோல்வியை தழுவியுள்ளது. அதன் விளைவாக கச்சா எண்ணெய் பியூச்சர்ஸ் சந்தையில் அமெரிக்காவின் டெக்சாஸ் இன்டர்மீடியேட் கச்சா எண்ணெய் விலை 7 சதவீதம் சரிந்து ஒரு பேரல் விலை 89.40 டாலராக குறைந்துள்ளது.
இதையும் படிங்க : பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்களை அறிமுகம் செய்யும் ஆர்பிஐ.. ஏப்ரல் முதல் அமலுக்கு வரும்!
ஈரான் – அமெரிக்கா போர் காரணமாக ஹோர்முஸ் நீரிணையை கடக்க கப்பல்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு, முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் மீது திரும்பியது. ஆனால், தற்போது நிலமை தலைகீழாக மாறியுள்ளது. அதாவது, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் எண்ணெய் கப்பல்கள் கடந்துச் செல்ல ஈரான் அனுமதி அளித்துள்ளது. மேலும் அமெரிக்காவின் மிட்டேரம் தேர்தல் முடிவுகளின் எதிரொலியால் கச்சா எண்ணெயும் விலை உயர்ந்துள்ளது. இவற்றின் காரணமாக தற்போது தங்கம் மீண்டும் விலை உயர்வை சந்திக்க தொடங்கியுள்ளது.