AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

திரையரங்குகளில் கொண்டாடப்படும் ராமாயணா படம் – மக்களின் விமர்சனம் இதோ!

Ramayana Movie X Review Here | இந்தி சினிமாவில் நடிகர்கள் ரன்பீர் கபூர் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகி இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ள படம் ராமாயணா. இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

திரையரங்குகளில் கொண்டாடப்படும் ராமாயணா படம் – மக்களின் விமர்சனம் இதோ!
ராமாயணாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 05 Nov 2026 11:38 AM IST

இந்திய சினிமாவில் பல முறை இந்த கதையை படமாகவும் நெடும் தொடராகவும் எடுக்கப்பட்டாலும் ஒவ்வொரு முறையும் மக்களை பார்ப்பதற்கு தூண்டும் விதமாக உள்ளது ராமாயணா (Ramayana) கதை. அந்த வகையில் இந்த முறை இந்த ராமாயணா கதையை இந்தியில் படமாக எடுத்துள்ளனர். இதனை இயக்குநர் நித்திஷ் திவாரி இயக்கி உள்ள நிலையில் நடிகர் ரன்பீர் கபூர் ராமராகவும், நடிகை சாய் பல்லவி சீதையாகவும் நடிகர் யாஷ் ராவணனாகவும், நடிகர் சன்னி தியோல் ஹனுமனாகவும் நடித்து உள்ளனர். மிகப்பெரிய நடிகர்கள் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. பல நூறு கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ள இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாகின்றது. அதன்படி முதல் பாகம் இன்று 05-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

இந்த ராமாயணா படத்தின் ட்ரெய்லர் வெளியான போதே விஎஃப்எக்ஸ் மற்றும் தொழில்நுட்ப வேலைபாடுகளுக்காக ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றது. இந்த நிலையில் திரையரங்குகளில் இன்று படம் வெளியாகி உள்ள நிலையில் அதனை ரசிகரக்ள் எப்படி கொண்டாடுகிறார்கள் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

ராமாயணா படத்தின் எக்ஸ் விமர்சனம் இதோ:

வெறும் காட்சி அனுபவத்திற்காகவே அமர்ந்தேன். கண்கவர் காட்சிகள், விறுவிறுப்பான சண்டைக் காட்சிகள், மற்றும் கதையை உயிர்ப்புடன் வெளிப்படுத்தும் நேர்த்தியான நாடகக் காட்சிகள் என, ஒரு பிரம்மாண்டமான காட்சி விருந்தையே எதிர்பார்க்கிறேன்.

ராமாயணா படத்தின் எக்ஸ் விமர்சனம் இதோ:

ஒரு திருப்திகரமான திரையரங்க அனுபவம்! ராவணனாக நடித்திருக்கும் யாஷ், இப்படத்தின் மிகப்பெரிய சிறப்பம்சம். திரையில் அவரது தோற்றம்… சொல்லவே வார்த்தைகள் இல்லை! ராவணனை வெறும் வழக்கமான வில்லனாக மட்டும் காட்டாமல், அந்த கதாபாத்திரத்தின் ஆழத்தையும், அவர் எதைப் பிரதிபலிக்கிறார் என்பதையும் படம் தெளிவாக வெளிப்படுத்துகிறது. அவர் இடம்பெறும் அனைத்துக் காட்சிகளும் மிகவும் ஈர்க்கக்கூடிய வகையில் உள்ளன.

ராமாயணா படத்தின் எக்ஸ் விமர்சனம் இதோ:

ராமாயணம் – ‘டிராமாயணம்!!’ சிறப்பம்சங்கள்: மிகச்சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ், உருவாக்கம், அற்புதமான யஷ் எபிசோடுகள் மற்றும் ஜடாயு காட்சி! இசை, ரன்பீர், ராம்-சீதாவின் உணர்ச்சிகள், சுவாரஸ்யமற்ற கதை/நாடகம், நீண்ட நேரம் ஓடுவது ஆகியவை குறைகள். சராசரி!

Also Read… தர்மன் படத்திலிருந்து வெளியானது ஸ்ரீலீலாவின் அறிமுக வீடியோ!

ராமாயணா படத்தின் எக்ஸ் விமர்சனம் இதோ:

அசத்தலான சினிமா! ஒரு பிரம்மாண்டமான கலைப்படைப்பு! கண்களைக் கவரும் காட்சிகள், அபாரமான கதைசொல்லல், மெய்சிலிர்க்க வைக்கும் தருணங்கள், மற்றும் ரன்பீர் கபூர், யாஷ், சாய் பல்லவி ஆகியோரின் மிகச்சிறந்த நடிப்பு! இது போன்றதொரு திரையரங்க அனுபவம் ஒரு தலைமுறைக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும். இந்திய சினிமாவின் புதிய இமாலய வெற்றி! ‘ராமாயணம்’ ஒரு வரலாற்றுச் சாதனை!

Also Read… பிக்பாஸ் சீக்ரெட் டாஸ்கில் முதல் டார்கெட் யார் தெரியுமா? வைரலாகும் புரோமோ வீடியோ!

Follow Us