AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Jailer 2: கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் ஜெயிலர் 2 திரைப்படம்…? ரஜினிகாந்த் ரசிகர்களே சர்ப்ரைஸ் இதோ!

Jailer OTT Release: தென்னிந்திய சினிமாவில் 2026ம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு, கடந்த 2026 அக்டோபர் 15ம் தேதியில் வெளியான திரைப்படம்தான் ஜெயிலர் 2. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முன்னணி நாயகனாக நடித்திருந்த இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் மற்றும் கூடுத்தக் காட்சிகளுடன் வெளியாகுவது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

Jailer 2: கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் ஜெயிலர் 2 திரைப்படம்…? ரஜினிகாந்த் ரசிகர்களே சர்ப்ரைஸ் இதோ!
ஜெயிலர் 2 திரைப்படம்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 04 Nov 2026 21:46 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் (Superstar Rajinikanth) முன்னணி நடிப்பில் 2026ம் ஆண்டில் வெளியான பிரம்மாண்ட திரைப்படம்தான் ஜெயிலர் 2 (Jailer 2). இந்த படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் (Director Nelson Dilipkumar) இயக்கியிருந்த நிலையில், கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக உருவாகிவந்தது. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருந்த நிலையில், அவருடன் பான் இந்திய நடிகர்களும் இணைந்து நடித்திருந்தனர். சன் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட இப்படத்திற்கு அனிருத் (Anirudh) இசையமைத்திருந்தார். இவரின் இசையில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையானது சிறப்பாகாவே இருந்தது.

இந்த திரைப்படமானது 2023ம் ஆண்டில் வெளியான ஜெயிலர் 1 படத்தின் தொடர்ச்சியான கதைக்களத்தில் உருவான நிலையில், கடந்த 2026 அக்டோபர் 15ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இந்த படமானது வெளியாகி கிட்டத்தட்ட 20 நாட்களுக்கும் மேல் கடந்த நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் மற்றும் கூடுதல் காட்சிகள் ஓடிடியில் வெளியாகுவதாக தகவல்கள் வெளியாகிவருகிறது.

இதையும் படிங்க: செஞ்சுடரே உன் செங்கனல் சிறைக்குள்ளே…. தனுஷின் ஓம் திரைப்படத்திலிருந்து வெளியான 3வது பாடல்!

ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 திரைப்படம் குறித்து படக்குழு பகிர்ந்த பதிவு:

நீடிக்கப்பட்ட காட்சிகளுடன் ஓடிடியில் ஜெயிலர் 2:

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான இந்த ஜெயிலர் 2 திரைப்படத்தில் பான் இந்திய நடிகர்கள் பலர் நடித்திருந்தனர். அதில் சந்தானம், விஜய் சேதுபதி மற்றும் ஹிருத்திக் ரோஷன் உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இதில் சந்தானம் நடித்த காட்சிகள் முழுவதுமாகவே நீக்கப்பட்டுள்ளது. மேலும் விஜய் சேதுபதி மற்றும் மோகன் லால் போன்ற நடிகர்கள் இணைந்திருந்த காட்சிகளும் ட்ரிம் செய்யப்பட்டிருந்தது. அந்த விதத்தில் இந்த காட்சிகள் எல்லாமே சேர்த்து ஓடிடியில் வெளியாகாவுள்ளதாக வட்டாரங்களில் தகவல்கள் பரவிவருகிறது.

இதையும் படிங்க: டேர் டெவில் நல்ல படமாக அமையனும்.. அப்போதுதான் – ஆதிக் ரவிச்சந்திரன் பேச்சு!

சன் நெஸ்ட் ஓடிடியில் (Sun NXT OTT) ஜெயிலர் 2 திரைப்படமானது நீடிக்கப்பட்ட காட்சிகளுடன் வெளியாகிறதாம். இதுபோல அமேசான் ப்ரைம் ஓடிடியிலும் வெளியாகும் என கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை. இந்த திரைப்படமானது 2026ம் ஆண்டு நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பர் தொடக்கத்தில் ஓடிடியில் வெளியாக வாய்ப்புகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us