Chennai Rains: தீபாவளி தினத்த்தன்று சென்னையில் மழை பெய்யுமா? எங்கெல்லாம் மழை இருக்கும்? வானிலை நிலவரம் சொல்வதென்ன?
Rainfall Alert: நவம்பர் 6ஆம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு வடகிழக்கு பருவமழையின் இரண்டாவது சுற்று மழை மாநிலம் முழுவதும் பரவலாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கடலோர மாவட்டங்கள், காவிரி டெல்டா, தென் மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் சீரான மழைப்பொழிவு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 4, 2026: தமிழகத்தில் தீபாவளி பண்டிகையின்போது பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் கணித்துள்ளார். மேலும், நவம்பர் 6ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழையின் இரண்டாவது சுற்று மழை தொடங்கி மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 15ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதனைத் தொடர்ந்து வடகடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், காவிரி டெல்டா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த சில நாட்களுக்கான மழை நிலவரம் குறித்து ஹேமச்சந்திரன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கணிப்புகளை வெளியிட்டுள்ளார்.
மேலும் படிக்க: தென் மாவட்டங்களில் தொடரும் மழை.. இன்று 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை..
அதன்படி, நவம்பர் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் தமிழகத்தில் பெரும்பாலும் தெளிவான வானிலையும் வெப்பமான சூழலும் நிலவும். இருப்பினும், ஆங்காங்கே திடீரென மேகங்கள் சூழ்ந்து இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கிடையே, தென்சீனக் கடல் பகுதியில் இருந்து ஈரப்பதம் நிறைந்த கீழைக்காற்று நவம்பர் 6 முதல் 11ஆம் தேதி வரை தமிழகத்தை நோக்கி வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு சீரான கீழைக்காற்றின் முதல் வருகையாக இது அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நவ. 7 முதல் 10 வரை கனமழைக்கு வாய்ப்பு
டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர் தீபாவளி சிறப்பு வானிலை அறிக்கை| தேதி: 04.11.2026
#தலைப்பு: தீபாவளி வானிலை & 2ம் சுற்று பருவமழை அறிக்கை.
#வானிலைஅமைப்பு:
==> இன்று (04.11.2026) காலை 8:30 மணி நிலவரப்படி ஈரோடு மாவட்டம் தல்குனி 9 செ.மீ, திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர், ஈரோடு மாவட்டம் திங்களூர், கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை தலா 8 செ.மீ மழை பதிவு. திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் 6 செ.மீ மழை பதிவு.==> தென்சீனக்கடலில் இருந்து ஈரப்பதமிகுந்த கீழைக்காற்று நவம் 6 முதல் 11ம் தேதி வரை தமிழகத்திற்கு வருகை தருகிறது.
==> வடகிழக்கு பருவமழை துவங்கி, சீரான கீழைக்காற்றின் முதல் வருகையாக இது அமையும்.
#வானிலைஎதிர்ப்பார்ப்பு:
==> தமிழ்நாட்டில் இன்றும் (04.11.2026) & நாளையும் (05.11.2026) தெளிவான வானத்துடன் வெப்பமான சூழலும், ஆங்காங்கே திடிரென மேகம் சுழ்ந்து இடி,மின்னலுடன் கூடிய மழையும் பதிவாககூடும்.
(06.11.2026) முதல் (11.11.2026)
==> வடகிழக்கு பருவமழையின் இரண்டாம் சுற்று மழை நவ 6 முதல் ஒரு வாரத்திற்கு பரவலாகும் என எதிர்ப்பர்க்கப்படுகிறது.
==> கடலோர மாவட்டங்கள்,காவிரி டெல்டா, தென் மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், மேற்கு & மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் என மாநிலம் முழுதும் சீரான மழைப்பொழிவை இரண்டாம் சுற்று மழை கொடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
==> நவம் 7 முதல் 10 வரை தீபாவளி தினம் உட்பட காவிரி டெல்டா & தென் மாவட்டங்களில் விட்டு விட்டு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
==================================தீபாவளி பண்டிகைகால அறிவுறுத்தல்கள்:
1. தற்போது ஆங்காங்கே பெய்து வரும் 2ம் சுற்று மழை நவ 6 முதல் 10 வரை பரவலாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
2. இந்த மழை தொடர் மழையாகவோ, அடை மழையாகவோ இல்லாமல் சீரான மழையாகவும்/விட்டு விட்டு பெய்யக்கூடிய மழை என்பதால் பண்டிகைகால கொண்டாட்டங்களை பாதிக்காது ஆனால் இடையூறு அளிக்கும்.
3. பண்டிகை கால பயணங்கள் மேற்கொள்பவர்கள் வெயில் அடித்தாலும் குடை, ரெயின் கோட்டுடன் வெளியில் செல்வது நல்லது.
4. பண்டிகை கால வியாபாரிகள், புதிய வெடிக்கடைகள் அமைப்பவர்கள் திடிர் கனமழையில் பொருட்கள் நனையாதவாறு பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும். நல்ல வெயில் அடித்தாலும் திடிரென மேகம் சூழ்ந்து 30-45 நிமிடம் கனமழை பெய்யும் என்பதால் கடை வியாபாரிகள் விழுப்புடன் இருக்க வேண்டும்.
5. தண்ணீர் இல்லாமல் பூச்சிக்கட்டுப்பாடு, களைக்கட்டுப்பாடு பணிகளை மேற்கொள்ளாமல் காத்திருந்த விவசாயிகள் அடுத்த 2 நாட்களில் வேளாண் பணிகளை தொடரலாம்.
6. தீபாவளி விடுமுறையில் வால்பாறை, சின்னக்கல்லாறு, ஏற்காடு, கொடைக்கானல், தேக்கடி, மூனாறு, உதகமண்டலம், குற்றாலம் போன்ற மலை தொடர்கள் செல்ல திட்டமிட்டிருப்பவர்கள் தாராளமாக செல்லலாம். செல்லும் போது மழை இடையூறு இருக்க கூடும், பயணத்தை பாதிக்கும் மழை இருக்காது. அருவிகளில் குளிப்பதை தவிர்ப்பது நல்லது.
7. அர்னாப், முரசு என தொழிலுக்கு செல்லமுடியாமல் முடங்கிய மீனவர்களுக்கு நவ 10 வரை எந்தவித எச்சரிக்கையும் இல்லை மீன்பிடி தொழிலுமக்கு தாரளமாக சென்று வரலாம்.
என்றும் இயற்கையுடன்
டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர்#diwalirains #diwali2026
— Deltaweatherman Hemachander (@Deltarains) November 4, 2026
நவம்பர் 6ஆம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு வடகிழக்கு பருவமழையின் இரண்டாவது சுற்று மழை மாநிலம் முழுவதும் பரவலாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கடலோர மாவட்டங்கள், காவிரி டெல்டா, தென் மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் சீரான மழைப்பொழிவு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நவம்பர் 7 முதல் 10ஆம் தேதி வரை, தீபாவளி பண்டிகை தினம் உட்பட காவிரி டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தீபாவளி கொண்டாட்டங்களுக்கு பாதிப்பு இருக்குமா?
இந்த மழை தொடர்ந்து பெய்யும் அடைமழையாக இல்லாமல், அவ்வப்போது பெய்யக்கூடிய சீரான மழையாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் தீபாவளி கொண்டாட்டங்கள் முழுமையாகப் பாதிக்கப்படாது என்றாலும், சில இடையூறுகள் ஏற்படலாம் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: தீபாவளி சிறப்பு கண்காட்சி.. சென்னையில் 3 நாள்கள் நடக்கிறது.. என்னென்ன ஷ்பெஷல் தெரியுமா?
மலைப்பகுதிகளுக்குச் செல்லலாமா?
தீபாவளி விடுமுறையில் வால்பாறை, சின்னக்கல்லாறு, ஏற்காடு, கொடைக்கானல், தேக்கடி, மூணாறு, உதகமண்டலம், குற்றாலம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளவர்கள் பயணங்களை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார். இருப்பினும், மழையால் பயணத்தின்போது சில இடையூறுகள் ஏற்படக்கூடும் என்பதால் அருவிகளில் குளிப்பதைத் தவிர்ப்பது நல்லது எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மழை காரணமாக வேளாண் பணிகளைத் தொடங்காமல் காத்திருந்த விவசாயிகள் அடுத்த இரண்டு நாட்களில் பணிகளைத் தொடரலாம் என்றும் தெரிவித்துள்ளார். அர்னாப், முரசு புயல்கள் காரணமாக மீன்பிடித் தொழிலுக்குச் செல்ல முடியாமல் இருந்த மீனவர்கள் நவம்பர் 10ஆம் தேதி வரை எந்தவித வானிலை எச்சரிக்கையும் இல்லாததால் மீன்பிடிக்கச் செல்லலாம் என்றும் ஹேமச்சந்திரன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.