AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கால் டாக்ஸி மீது மோதி விபத்தில் சிக்கிய போதை வாலிபர்கள்… தூக்கிவிடச் சென்ற பொதுமக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Crime News: கோவை தொண்டாமுத்தூர் காவல் எல்லைக்கு உட்பட்ட மாதம்பட்டி பகுதியில் நேற்று மாலை கால் டாக்ஸி ஒன்று சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது, இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த இரண்டு வாலிபர்கள், கட்டுப்பாட்டை இழந்து கால் டாக்ஸியின் பின்புறத்தில் பலமாக மோதினர். இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் கீழே விழுந்து காயமடைந்தனர். அவர்கள் அதிகளவு மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

கால் டாக்ஸி மீது மோதி விபத்தில் சிக்கிய போதை வாலிபர்கள்… தூக்கிவிடச் சென்ற பொதுமக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
கோப்பு புகைப்படம்
Sekaran S
Sekaran S | Published: 04 Nov 2026 20:03 PM IST

நவம்பர் 4, 2026: கோவை மாதம்பட்டி பகுதியில் மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு வாலிபர்கள், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கால் டாக்ஸி மீது மோதி விபத்தில் சிக்கினர். காயமடைந்து சாலையில் கிடந்த அவர்களைத் தூக்கிவிடச் சென்ற பொதுமக்களுக்கு, வாலிபர்களிடம் சுமார் இரண்டு அடி நீளமுள்ள கூர்மையான கத்தி இருந்தது தெரியவந்தது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கால் டாக்ஸி மீது மோதி விபத்து

கோவை தொண்டாமுத்தூர் காவல் எல்லைக்கு உட்பட்ட மாதம்பட்டி பகுதியில் நேற்று மாலை கால் டாக்ஸி ஒன்று சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது, இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த இரண்டு வாலிபர்கள், கட்டுப்பாட்டை இழந்து கால் டாக்ஸியின் பின்புறத்தில் பலமாக மோதினர். இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் கீழே விழுந்து காயமடைந்தனர். அவர்கள் அதிகளவு மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க: தவெகவின் தற்குறி நிர்வாகமே வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்.. குதிரை பேர குற்றச்சாட்டில் நீலி கண்ணீர் வடிக்க வெட்கமா இல்லையா.. பொங்கிய டிடிவி தினகரன்!

தூக்கிவிடச் சென்ற பொதுமக்களுக்கு அதிர்ச்சி!

விபத்தைக் கண்ட அப்பகுதி பொதுமக்களும், பாதசாரிகளும் உடனடியாக ஓடிச் சென்று காயமடைந்த வாலிபர்களைத் தூக்கிவிட முயன்றனர். அப்போது, அவர்களிடம் சுமார் இரண்டு அடி நீளமுள்ள கூர்மையான கத்தி ஒன்று இருந்தது தெரியவந்தது.

போதையில் இருந்த வாலிபர்களிடம் இவ்வளவு நீளமான கத்தி இருந்ததைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து, அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க இருவரையும் பொதுமக்கள் சுற்றிவளைத்துப் பிடித்தனர்.

மேலும் படிக்க: லஞ்சம், ஊழல், போதைப்பொருள் பக்கம் போகாதீர்கள்.. எதற்கும் அடிமையாகாதீர்கள் – மாணவர்களுக்கு முதலமைச்சர் விஜய் அட்வைஸ்..

கத்தியுடன் சிக்கிய வாலிபர்கள்… போலீசார் விசாரணை!

இதுகுறித்து தொண்டாமுத்தூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பொதுமக்களால் பிடித்து வைக்கப்பட்டிருந்த இரண்டு வாலிபர்களையும், அவர்களிடம் இருந்த இரண்டு அடி நீளக் கத்தியையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அந்த வாலிபர்கள் யார், எதற்காகக் கத்தியுடன் சுற்றி வந்தனர், மதுபோதையில் இருந்த அவர்கள் ஏதேனும் குற்றச் சம்பவங்களில் ஈடுபடத் திட்டமிட்டிருந்தார்களா என்பது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us