AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Om: செஞ்சுடரே உன் செங்கனல் சிறைக்குள்ளே…. தனுஷின் ஓம் திரைப்படத்திலிருந்து வெளியான 3வது பாடல்!

Senjudare Song: அமரன் திரைப்படத்தினை இயக்கி மக்கள் மத்தியில் இயக்குநராக பிரபலமானவர் ராஜ்குமார் பெரியசாமி. இவரின் இயக்கத்தில் மற்றும் தனுஷ் நடிப்பில் புதிதாக உருவாகியுள்ள திரைப்படம்தான் ஓம். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ள நிலையில், தற்போது செஞ்சுடரே என்ற மூன்றாவது பாடல் வெளியாகியுள்ளது.

Om: செஞ்சுடரே உன் செங்கனல் சிறைக்குள்ளே…. தனுஷின் ஓம் திரைப்படத்திலிருந்து வெளியான 3வது பாடல்!
செஞ்சுடரே பாடல் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 04 Nov 2026 21:04 PM IST

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் (Director Rajkumar Periasamy) இயக்கத்தில், தனுஷ் நடித்துவந்த புதிய திரைப்படம்தான் ஓம் (Om Movie). இந்த திரைப்படத்தில் தனுஷ் (Dhanush) ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீலீலா (Sreeleela) நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடிக்க, அவரின் தந்தை வேடத்தில் மலையாள நடிகர் மம்முட்டி (Mammootty) நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் நடிகை சாய் பல்லவி (Sai Pallavi) மற்றும் இந்திரன்ஸ் உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தை அமரன் திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள நிலையில், மக்கள் மத்தியில் சிறப்பான எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது. இந்த படமானது செம்மர கடத்தல் மற்றும் ஆந்திர எல்லை குறித்த கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ள நிலையில், இந்த படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை அமைந்துள்ளது. ஏற்கனவே இப்படத்திலிருந்து இரு பாடலால் வெளியாகிவிட்ட நிலையில், தற்போது “செஞ்சுடரே” என்ற மூன்றாவது பாடல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: வேர்ல்ட் ஆப் அரசன் ப்ரோமோ தீபாவளிக்கு இல்லையா? சிம்பு ரசிகர்களுக்கு ஷாக் தகவல்!

ஓம் திரைப்படத்தின் செஞ்சுடரே பாடல் குறித்து வெளியான எக்ஸ் பதிவு:

ஓம் திரைப்படத்தின் சென்சார் அப்டேட்:

இந்த ஓம் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் ஹீரோவாக நடிக்க, அவருக்கு மனைவியாக நடிகை ஸ்ரீலீலா நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக சாய் பல்லவியும், தனுஷின் அப்பாவாக நடிகர் மம்முட்டியும் நடித்துள்ளனர். இப்படம் ஆந்திர மற்றும் தமிழக எல்லையில் நடக்கும் செம்மர கடத்தல் தொடர்பான கதைக்களத்தில் அமைக்கப்பட்டுள்ளதாம். இந்த படமானது உண்மையான சம்பவம் மற்றும் கொஞ்சம் கற்பனையான கதையை மையப்படுத்தி இயக்கப்பட்டுள்ளதாம். அந்த விதத்தில் இப்படத்தில் அதிரடி காட்சிகள் மற்றும் வன்முறை காட்சிகளும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஏன் இந்த பெண்ணுக்கு… விஜய் ஆண்டனியின் அப்பா குட்டி படத்தின் 2வது சிங்கிள் வெளியீடு!

அந்த விதத்தில் இந்த படத்திற்கு யு/ஏ 16+ என்ற சென்சார் சான்றிதழ் கொடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அதனால் இந்த படத்தை 16 வயதிற்கும் மேற்பட்ட நபர்கள் திரையரங்குகள் சென்று பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் அப்டேட்டுகளும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us