Appa Kutty: ஏன் இந்த பெண்ணுக்கு… விஜய் ஆண்டனியின் அப்பா குட்டி படத்தின் 2வது சிங்கிள் வெளியீடு!
Yean Indha Pennukku Song: தமிழில் இசையமைப்பாளர், நடிகர் மற்றும் தயாரிப்பாளராக மக்கள் மத்தியில் பிரபலமானவர் விஜய் ஆண்டனி. இவரின் நடிப்பில் பீல் குட் கதைக்களத்தில் உருவாகியுள்ள படம்தான் அப்பா குட்டி. இப்படத்திலிருந்து ஏன் இந்த பெண்ணுக்கு என்ற பாடல் வெளியாகி இணையத்தில் பரவிவருகிறது.
நடிகர் விஜய் ஆண்டனி (Vijay Antony) தமிழ் சினிமாவில் முக்கியமான பிரபலங்களில் ஒருவராக இருந்துவருகிறார். கடந்த 2005ம் ஆண்டில் வெளியான சுக்ரன் (Sukran) என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் இசையமைப்பாளராக நுழைந்தார். இந்த படத்திற்கு பிறகு பல்வேறு பிரபலங்களின் படங்களிலும் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். இவரின் இசையில் முதல்வர் விஜய் (CM Vijay) முதல் தனுஷ் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்களின் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இவர் ஹீரோவாக நான் என்ற திரைப்படத்தில் அறிமுகமான நிலையில், அதை தொடர்ந்து பேக் டூ பேக் ஹீரோவாகவும் நடிக்க தொடங்கிவிட்டார். மேலும் தந்து படங்களுக்கும் தானே இசையமைத்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் இந்த 2026ம் ஆண்டில் இவரின் நடிப்பில் 3வது வெளியாக காத்திருக்கும் திரைப்படம்தான் அப்பா குட்டி (Appa Kutty).
பீல் குட் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை இயக்குநர் மு. மாறன் இயக்கியுள்ள நிலையில், விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்திற்கும் அவரே இசையமைத்துள்ள நிலையில், தற்போது “ஏன் இந்த புண்ணுக்கு” என்ற 2வது பாடல் வெளியாகியுள்ளது.




இதையும் படிங்க: என்னப்பா இது…. மீண்டும் சாப்பாட்டிற்காக போட்டியாளர்களிடம் சண்டையிடும் ஜேசன்…!
அப்பா குட்டி திரைப்படத்தின் ஏன் இந்த பொண்ணுக்கு என்ற பாடல் பதிவு:
A soothing love song waiting to melt your hearts ❣️
@thepreethiasrani and her expressions 😍
🔗 – https://t.co/xK5gVOLnAD
Lyrics by – @Arunbharathi_A
Sung by – @RBandhukiaWritten & Directed by: @mumaran1
A @Vijayantony Musical 🎵
@mrsvijayantony @vijayantony
@haripriyaa_off @actorbucks @Aruvimadhan @actormuthukumar @dhivakargj @lizzieantony @MunnarRamesh @748b733cebe946f @sugaa14 @puthiyaparithi @mahesh25071985 #thamuruganandam @cinemapayyan @ProRekha @PROSaiSatish#EnIndhaPennukku
#AppaKuttyFromNov20— vijayantony (@vijayantony) November 3, 2026
இந்த படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார். மேலும் வரிகளுடன் பகவதி பெருமாள், ஜன நாயகன் பட குழந்தை நட்சத்திரம் லிதான்யா உள்ளிட்ட பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். இப்படமானது அப்பா மற்றும் மகள் இருவரின் பாசம் குறித்த கதைக்களத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் நடிகை ப்ரீத்தி அஸ்ரானி, விஜய் ஆண்டனி மீது ஆசைப்படும் ஒரு பெண்ணாக நடித்துள்ளார்.
இதையும் படிங்க: நோ சூர்யா… மணிரத்னம் இயக்கத்தில் தனுஷ் இணைந்து நடிப்பது இந்த நடிகரோடா? வைரலாகும் தகவல்
இப்படமானது சிறப்பான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், 2026ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் நிச்சயம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் பாடல்கள் தொடர்பான அப்டேட்டுகள் வெளியாகிவரும் நிலையில், விரைவில் ட்ரெய்லர் குறித்த அப்டேட்டும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.