AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இனி திரையரங்குகளில் காலை 6 மணிக்கே முதல் காட்சி – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு – தீபாவளிக்கு வசூல் வேட்டை!

TN Government Permits 6 AM Shows : தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் பண்டிகை நாட்கள், அரசு பொது விடுமுறை நாட்கள் மற்றும் சனி,  ஞாயிற்றுக்கிழமைகளில் தினசரி 6 காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, குறிப்பிட்ட நாட்களில் திரையரங்குகளில் காலை 6 மணிக்கே முதல் காட்சியைத் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இனி திரையரங்குகளில் காலை 6 மணிக்கே முதல் காட்சி – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு – தீபாவளிக்கு வசூல் வேட்டை!
நடிகர் சூர்யா - முதல்வர் விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 03 Nov 2026 18:39 PM IST

சென்னை, நவம்பர்  3 : தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் பண்டிகை நாட்கள், அரசு பொது விடுமுறை நாட்கள் மற்றும் சனி,  ஞாயிற்றுக்கிழமைகளில் தினசரி 6 காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, குறிப்பிட்ட நாட்களில் திரையரங்குகளில் (Theatre) காலை 6 மணிக்கே முதல் காட்சியைத் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திரையரங்குகளில் காலை 6 மணி காட்சிக்கு அனுமதி

இந்த அறிவிப்பு திரைப்பட ரசிகர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. குறிப்பாக, புதிய திரைப்படங்கள் வெளியாகும் விடுமுறை நாட்களில் கூடுதல் காட்சிகளைத் திரையிட இந்த அனுமதி வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வருகிற நவம்பர் 8, 2026 அன்று தீபாவளி கொண்டாடப்படவுள்ள நிலையில் நவம்பர் 6, 2026 அன்று சூர்யாவின் சீன், சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா உள்ளிட்டோர் நடித்த மூக்குத்தி அம்மன் 2, ராமாயணா உள்ளிட்ட படங்கள் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் காலை 6 மணி காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் மேற்சொன்ன படங்களின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க : Tamil Nadu Weather Alert: தீபாவளியன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை

இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியான அறிக்கையில், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளில் புதிய தமிழ் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஒரு வாரத்திற்கு தினசரி 6 காட்சிகள் காலை 6 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 2.30 மணி வரை திரையிட அனுமதியளித்து முதல்வர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளெக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் ஆகியோர் பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசிடம் முன்வைத்தனர். அவற்றில் முக்கியமாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடும் நாளிலிருந்து ஒரு வார காலத்திற்கு திரைப்படங்களை நாளொன்றுக்கு 6 காட்சிகள் காலை 06.00 மணியிலிருந்து அடுத்த நாள் 2.30 மணி திரையிட அனுமதியளிக்கும்படி கோரியிருந்தனர்.

கடந்த 1957 ஆம் ஆண்டு தமிழ்நாடு திரையரங்குகள் விதியின் கீழ், திரையரங்குகளுக்கு வழங்கப்படும் ‘C’ படிவ உரிம நிபந்தனை 14 A இன்படி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளிலும் தினசரி 4 காட்சிகள் திரையிடப்பட்டு வருகிறது. மேலும், இவ்வரசு பொறுப்பேற்ற பிறகு புதியதாக வெளியிடப்படும் தமிழ்த் திரைப்படங்கள். வெளியிடப்படும் நாளிலிருந்து, ஏழு நாட்களுக்கு தினசரி ஐந்து காட்சிகள் திரையிடவும், உள்ளூர் பண்டிகை நாட்கள், பொதுவிடுமுறை நாட்கள், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தினசரி ஐந்து காட்சிகள் திரையிட அனுமதியளிக்கப்பட்டு தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது.

இதையும் படிக்க : சிவகார்த்திகேயன் நற்பணி மன்றத்தின் அடுத்த பிளான் – வெளியான வீடியோ – அரசியல் வருகைக்கான முன்னோட்டமா?

திரைப்படத் துறையினர் அளித்த கோரிக்கை குறித்து கலந்தாலோசித்த பின்னர், தமிழ்நாடு திரையரங்குகள் (ஒழுங்குமுறை) விதிகளில் திருத்தம் செய்ய முடிவு செய்து தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளிலும் புதியதாக வெளியிடப்படும் தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஒரு வாரத்திற்கு தினசரி 6 காட்சிகளுக்கு மிகாமல் காலை 6 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 2.30 மணி வரை திரையிடவும். உள்ளூர் பண்டிகை நாட்கள். பொது விடுமுறை நாட்கள். சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தினசரி ஆறு காட்சிகள் திரையிடவும் உத்தரவிட்டுள்ளார்கள்.

Follow Us