IPL 2027: ஐபிஎல் 2027 ஏலத்தில் பங்கேற்பா..? மறுத்த பாகிஸ்தான் வீரர் முகமது அமீர்!
Mohammad Amir IPL Rumors: முன்னாள் பாகிஸ்தான் வீரர் முகமது அமீர், ஐபிஎல் 2027 ஏலத்தில் பங்கேற்பது குறித்த வதந்திகளை முற்றிலும் மறுத்துள்ளார். பிரிட்டிஷ் குடிமகனாக AFL-ல் பதிவு செய்ததால் ஏற்பட்ட இந்த செய்திகள் உண்மை இல்லை என அமீர் தனது சமூக வலைத்தளம் மற்றும் நேர்காணல் மூலம் உறுதிப்படுத்தினார்.
முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரும், தற்போது பிரிட்டிஷ் குடிமகனுமான முகமது அமீர் (Mohammad Amir), ஐபிஎல் 2027 மினி-ஏலத்தில் (IPL 2027) தான் நுழையப் போவதாக வந்த செய்திகளை மறுத்துள்ளார். அமீர் சமீபத்தில் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் (AFL) வீரர்கள் தேர்வில் பிரிட்டிஷ் குடிமகனாகத் தனது பெயரைப் பதிவு செய்தார். அதைத் தொடர்ந்து, ஐபிஎல் 2027 மினி-ஏலத்தில் அமீரின் பெயர் பரிசீலிக்கப்படலாம் என்று வதந்திகள் பரவத் தொடங்கின. இருப்பினும், அமீர் அந்த வதந்திகள் பொய்யானவை என்று கூறி, அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
கிரிக்பஸ்ஸில் வெளியான ஒரு அறிக்கையின்படி, ஐபிஎல் 2027 ஏலத்தில் பதிவு செய்வது குறித்து முகமது அமீரிடம் கேட்கப்பட்டபோது, ”இல்லை, நான் பதிவு செய்யவில்லை” என்று பதிலளித்தார். மேலும் அமீர் சமூக வலைதளங்களில், “ஐபிஎல்-ஐச் சுற்றியுள்ள வதந்திகள் உண்மையல்ல என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.




ALSO READ: ஐபிஎல் 2027 ஏலத்திற்கான தக்கவைப்பு காலக்கெடு நீட்டிப்பு..? ஏல தேதியிலும் மாற்றமா?
2008ம் ஆண்டுக்கு பிறகு..
Mohammad Amir has clarified through his Tweet that the reports circulating about the IPL are fake. 🚨 https://t.co/8D9p2FC7IG
— Sher 🌄 (@TheNameIsZaryan) November 2, 2026
2008ம் ஆண்டுக்கு பிறகு இந்தியன் பிரீமியர் லீக் தொடங்கியதிலிருந்து பாகிஸ்தான் வீரர்கள் அதில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிரிட்டிஷ் குடிமகனான அசார் மஹ்மூத், 2012, 2013 மற்றும் 2015ம் ஆண்டுகளில் ஐபிஎல்-லில் விளையாடியுள்ளார். பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல்-லில் விளையாட அனுமதிக்கப்படுவதில்லை. ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்வது என்பது நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒன்று.
முகமது அமீர் சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்காக 36 டெஸ்ட், 61 ஒருநாள் மற்றும் 62 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். தனது 159 சர்வதேசப் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் வாழ்க்கையில் முகமது அமீர் 271 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டிசம்பர் 2014-ல் அமீர் இரண்டாவது முறையாக சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். அதன் பிறகு, முகமது அமீர் ஃபிரான்சைஸ் கிரிக்கெட்டில் தொடர்ந்து தீவிரமாகப் பங்கேற்று வருகிறார்.
ALSO READ: ஐபிஎல்லில் களமிறங்கும் பாகிஸ்தான் வீரர்..? எகிறும் எதிர்பார்ப்பு!
திடீரென மாற்றப்பட்ட தக்கவைப்பு காலக்கெடு:
ஐபிஎல் 2027 மினி ஏலம் வருகின்ற 2026 டிசம்பர் 16ம் தேதி கோவாவில் நடைபெறும். தக்கவைப்புப் பட்டியலை வெளியிடுவதற்கான கடைசித் தேதியாக பிசிசிஐ முன்பு 2026 நவம்பர் 15 ஆம் தேதியை நிர்ணயித்திருந்தது, ஆனால் தற்போது அந்தத் தேதியை 2026 நவம்பர் 17 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, ஐபிஎல் 2027 மினி ஏலத்தில் பதிவு செய்ய விரும்பும் வீரர்கள் வருகின்ற 2026 நவம்பர் 23 ஆம் தேதி வரை பதிவு செய்யலாம் என்றும் பிசிசிஐ தெளிவுபடுத்தியுள்ளது.