AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND vs NZ: நியூசிலாந்தில் விராட் கோலியின் ராசி எப்படி..? ஆதிக்கமா..? எதிரணிக்கு பாதிக்குமா?

Virat Kohli's Stats in New Zealand: இந்தியா நியூசிலாந்து அணிகள் 2026 நவம்பர் 4 முதல் 15 வரை 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூசிலாந்தில் மோதுகின்றன. டெஸ்ட், டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற விராட் கோலி, ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதால், இத்தொடரில் விளையாடுவார்.

IND vs NZ: நியூசிலாந்தில் விராட் கோலியின் ராசி எப்படி..? ஆதிக்கமா..? எதிரணிக்கு பாதிக்குமா?
விராட் கோலிImage Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 03 Nov 2026 18:31 PM IST

இந்தியாவும் நியூசிலாந்தும் (IND vs NZ) 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு பிறகு, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளன. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியானது நாளை அதாவது 2026 நவம்பர் 4ம் தேதி நடைபெறுகிறது. இதில் விராட் கோலி இந்திய அணிக்காக விளையாடுவதைக் காணலாம். தற்போது, ​​விராட் கோலி (Virat Kohli) இந்தியாவுக்காக ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வரும் நிலையில், ஏற்கனவே டெஸ்ட் மற்றும் டி20 சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இந்த ஒருநாள் தொடர் நியூசிலாந்தில் நடைபெறுவதால், நியூசிலாந்தில் விராட் கோலியின் ஒருநாள் போட்டி சாதனைகளைப் பற்றிப் பார்ப்போம்.

ALSO READ: நியூசிலாந்து எதிரான முதல் ஒருநாள் போட்டி.. ரோஹித் சர்மாவுக்கு காத்திருக்கும் சாதனை வேட்டை..!

2026 நவம்பர் 4ம் தேதி தொடங்கும் ஒருநாள் தொடர், 2026 நவம்பர் 15ம் தேதி 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியுடன் முடிவடைகிறது. இந்த போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி காலை 7:30 மணிக்குத் தொடங்கும். முதல் 3 போட்டிகளுக்கு சுப்மன் கில் அணியை வழிநடத்துவார். மீதமுள்ள 2 போட்டிகளுக்கு ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியை வழிநடத்துவார்.

நியூசிலாந்தில் விராட் கோலியின் ஒருநாள் போட்டி சாதனை

விராட் கிங் கோலி 2014 முதல் 2020 வரை நியூசிலாந்தில் 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடினார். 13 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து, கோலி 49.66 சராசரியில் 596 ரன்கள் எடுத்தார். இதன்போது, கோலி ஒரு சதம் மற்றும் நான்கு அரை சதங்களை அடித்தார், அவரது அதிகபட்ச ஸ்கோர் 123 ஆகும். இதுமட்டுமின்றி, நியூசிலாந்தில் கோலி 55 பவுண்டரிகளையும் 10 சிக்ஸர்களையும் அடித்துள்ளார்.

விராட் கோலியின் ஒருநாள் போட்டி வாழ்க்கை

விராட் கோலியின் இதுவரை இந்திய அணிக்காக 317 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். 305 இன்னிங்ஸ்களில், கோலி 58.78 சராசரியில் 15,109 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 55 சதங்களையும் 79 அரை சதங்களையும் அடித்துள்ளார், அவரது அதிகபட்ச ஸ்கோர் 183 ஆகும்.

ALSO READ: இந்தியா-நியூசிலாந்து முதல் ஒருநாள்.. விறுவிறுப்பான போட்டியின் நேரலையை எங்கே பார்ப்பது?

வெஸ்ட் இண்டீஸ் எதிராக விளையாடிய கடைசி ஒருநாள் தொடர்:

கோலியின் கடைசி ஒருநாள் தொடர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அமைந்தது. இந்திய மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட தொடரில் கோலியின் ஆட்டம் கலவையாக இருந்தது. முதல் போட்டியில் கோலி ஆட்டமிழக்காமல் 139 ரன்கள் எடுத்தார். இரண்டாவது போட்டியில் 29 ரன்கள் எடுத்த கோலி, மூன்றாவது போட்டியில் டக் அவுட் ஆனார். இந்த மூன்று போட்டிகளிலும், ஒரு சதம் உட்பட, கோலி 84 சராசரியில் 168 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து மண்ணில் அவர் எப்படிச் செயல்படுகிறார் என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.

Follow Us