AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND vs NZ: நியூசிலாந்து எதிரான ஒருநாள் தொடர்.. இந்திய அணியில் குறிப்பிட்ட மாற்றத்தை செய்த பிசிசிஐ!

India vs NZ ODI Squad: இந்தியா-நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா தொடரிலிருந்து விலக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, ஆகிப் நபி முழு ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பிசிசிஐ இன்று இந்த மாற்றத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆகிப் நபி சிறப்பாகச் செயல்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

IND vs NZ: நியூசிலாந்து எதிரான ஒருநாள் தொடர்.. இந்திய அணியில் குறிப்பிட்ட மாற்றத்தை செய்த பிசிசிஐ!
ஆகிப் நபி
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 31 Oct 2026 17:10 PM IST

இந்தியா – நியூசிலாந்து (IND vs NZ) ஒருநாள் போட்டித் தொடருக்கான இந்திய அணி (Indian Cricket Team) மீண்டும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா தொடரிலிருந்து விலக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்குப் பதிலாக ஒரு புதிய வீரர் அறிவிக்கப்பட்டுள்ளார். அதன்படி, முதல் 3 ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபியையும் பிசிசிஐ சேர்த்துள்ளது. ஆரம்பத்தில், நபி கடைசி 2 போட்டிகளுக்கு மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். ஆனால், தற்போது பிரசித் கிருஷ்ணா நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, நஒஉ முழுத் தொடருக்குமான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பிசிசிஐ இதை இன்று அதாவது 2026 அக்டோபர் 31ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

பிசிசிஐ-யின்படி, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் 3 போட்டிகளுக்கான அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபியையும் ஆண்கள் தேர்வுக் குழு சேர்த்துள்ளது. முதலில் தொடரின் 4வது மற்றும் 5வது ஒருநாள் போட்டிகளுக்கு மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த இந்த வலது கை வேகப்பந்து வீச்சாளர், தற்போது முழு ஒருநாள் தொடரின் தொடக்கத்திலிருந்தே இந்திய அணியில் இடம்பெறுவார். காயம் காரணமாக பிரசித் கிருஷ்ணாவால் இந்த ஒருநாள் தொடரில் விளையாட முடியாது.

ALSO READ: ஒரு ஆண்டில் அதிகமுறை 200+ ரன்கள் விட்டுக்கொடுத்த சோகம்.. இந்திய அணி மோசமான சாதனை!

ஆகிப் நபி சிறப்பாக செயல்படுவாரா..?

ஆகிப் நபி ஏற்கனவே இந்தியாவுக்காக தனது ஒருநாள் போட்டியில் அறிமுகமாகிவிட்டார். குவஹாத்தியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நபி தனது ஒருநாள் போட்டியில் அறிமுகமானார், அதில் அவரால் விக்கெட் எடுக்க முடியாமல் 84 ரன்களை விட்டுக்கொடுத்தார். ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஆகிப், உள்ளூர் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கி வருகிறார், இது அவருக்கு மீண்டும் அணியில் இடத்தைப் பெற்றுத் தந்துள்ளது. கடந்த 2025ம் ஆண்டு ரஞ்சி கோப்பையை ஜம்மு அணி வெல்வதற்கு நபி முக்கியப் பங்காற்றினார்.

ALSO READ: இந்தியா-நியூசிலாந்து 5வது டி20.. செட்டன் பார்க் பிட்ச் ரிப்போர்ட்! பேட்ஸ்மேன்களுக்கு சாதகமா?

முதல் மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான அப்டேட் செய்யப்பட்ட இந்திய அணி:

சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், நமன் திர், அன்ஷுல் கம்போஜ், குர்னூர் பிரார், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், முகமது சிராஜ், குல்தீப் யாதவ், நிதிஷ் குமார் ரெட்டி (முதல் ஒருநாள் போட்டிக்கு மட்டும்), ஆகிப் நபி.

4வது மற்றும் 5வது ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி:

ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரோகித் சர்மா, விராட் கோலி, திலக் வர்மா, இஷான் கிஷன் (துணை கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், நமன் திர், ஆகிப் நபி, குர்னூர் பிரார், ருதுராஜ் கெய்க்வாட், குர்னூர் பிரார், முகமது சிராஜ், யாஷ் தாக்கூர், குல்தீப் யாதவ்.

Follow Us