தீபாவளிக்கு புது வரவாக தயாராகும் நெல்லை ஷ்பெஷல்.. அறுசுவையுடன் ABC அல்வா.. குவியும் ஆர்டர்கள்!
ABC Halwa Sale On Tirunelveli : தீபாவளி பண்டிகையையொட்டி, திருநெல்வேலி மாவட்டத்தில் புது விதமாக ஏபிசி அல்வா தயார் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வகை அல்வாவுக்கு பொது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது.
தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் இனிப்பு மற்றும் கார வகை பண்டங்கள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், அல்வாவுக்கு உலகப் புகழ்பெற்ற திருநெல்வேலியில் இனிப்பு மற்றும் கார வகைகள் விறுவிறுப்பாக தயார் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்காக இனிப்பு பலகாரங்களில் மிக முக்கியமாக ஏபிசி அல்வா ( ஆப்பிள், பீட்ரூட், கேரட் சேர்ந்த அல்வா) என்ற புதிய வகை அல்வா அறிமுகப்படுத்தப்பட்டு விற்பனைக்கு தயாராக உள்ளது. பொதுவாக திருநெல்வேலியில் கோதுமை அல்வா தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த அல்வாவுக்கு உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.
திருநெல்வேலியில் ஏபிசி அல்வா தயாரிக்கும் பணி
தற்போது, பண்டிகை காலங்களில் நுகர்வோரை மேலும் கவர்வதற்காக ஆரோக்கியமான ஏபிசி அல்வா என்ற புதுமை புகுத்தப்பட்டுள்ளது. உடலுக்கு நன்மை தரும் வகையில் ஆப்பிள், பீட்ரூட் மற்றும் கேரட் ஆகிய மூன்று கலவையில், கண்ணை கவரும் இயற்கை நேரத்துடன், அனாதியான சுவையுடன் இந்த அல்வா தயார் செய்யப்பட்டு வருகிறது. திருநெல்வேலியில் செயல்பட்டு வரும் முக்கிய இனிப்பு மற்றும் கார வகை பண்டங்கள் தயார் செய்யப்படும் கடைகளில் இந்த வகை ஏபிசி அல்வா விற்பனைக்கு கிடைக்கும்.
மேலும் படிக்க: தீபாவளிக்கு மறுநாள் விடுமுறையா.. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு.. ஆனால் ஒரு ட்விஸ்ட்!




வழக்கமான இனிப்புகளில் புதுவிதமாக ஏபிசி அல்வா
தீபாவளி பண்டிகையையொட்டி, இந்த மாத இறுதியிலேயே ஏபிசி அல்வா விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. உள்ளூர் உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்தி கடைகளில் இதனை பிரஷ்ஷாக தயார் செய்து வருகின்றனர். பொதுமக்கள் பண்டிகை கால பரிசாக வாங்குவதற்கும், ஒன்பதற்கும் ஏதுவாக கடைகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் வழக்கமான இனிப்புகளோடு இந்த ஆண்டு புது வகையான ஏ. பி. சி. அல்வாவையும் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாங்கி செல்வார்கள் என்று வியாபாரிகள் எதிர்பார்த்தும் காத்திருக்கின்றனர்.
அல்வாவுக்கு பெயர்போன நெல்லையில் ஏபிசி அல்வா
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு அல்வா, பால்கோவா, ரசகுல்லா, குலோப் ஜாமுன், மைசூர் பாகு, ஜாங்கிரி, அதிரசம் உள்ளிட்ட பல்வேறு வகையான இனிப்பு மற்றும் கார வகை பண்டங்கள் தயார் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுவது வழக்கமாகும். இந்த ஆண்டு தீபாவளிக்கு புதுவிதமான இனிப்பு பலகாரத்தை அறிமுகப்படுத்தும் விதமாக ஏ. பி. சி. அல்வா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: ரசீது, எண்ணெய் விவரங்கள் முக்கியம்… – தீபாவளி இனிப்பு, கார வகைகளை தயாரிப்பதற்கு வழிகாட்டு நெறிமுறைகள்