நெருங்கி வரும் தீபாவளி.. சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை எப்போது தொடங்கும்? வெளியான அறிவிப்பு!
Theevu Thidal Firecracker Sales : தீபாவளியையொட்டி, சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில், பட்டாசு விற்பனை வரும் நவம்பர் 3- ஆம் தேதி முதல் தொடங்கி 10- ஆம் தேதி வரை நடைபெற்ற உள்ளது.
இந்தியாவில் வருகிற அக்டோபர் 8- ஆம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்திலும் வெகு விமர்சையாக இந்த பண்டிகை கொண்டாட திட்டமிடப்பட்டு வருகிறது. இதற்காக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடைகள் எடுப்பது, பலகாரம் செய்வது, பட்டாசுகள் வாங்குவது என்பன உள்ளிட்ட பல்வேறு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தீபாவளி என்றாலே அனைவரது ஞாபகத்துக்கும் முதலில் வருவது பட்டாசுகளாக தான் இருக்கும். இந்த பட்டாசுகள் பல்வேறு ஊர்களில் கடைகள் மூலமாக விற்பனை செய்யப்படும். அதன்படி, சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையையொட்டி, தீவுத்தொடரில் பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டு சிறப்பு விற்பனை நடைபெறுவது வழக்கம் ஆகும்.
தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்கும் பணி
அதன்படி, இந்த ஆண்டுக்கான தீபாவளி சிறப்பு பட்டாசு விற்பனை கடைகள் தீவு திடலில் அமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு நீதிமன்ற வழக்கு காரணமாக கடைகள் திறப்பது தாமதம் ஆகி உள்ளது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் படி, தீவுத்திடலில் 30 கடைகள் அமைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் அதற்கான டெண்டர் விடப்பட்டு கடைகள் அமைக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க: தீபாவளிக்கு மறுநாள் விடுமுறையா.. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு.. ஆனால் ஒரு ட்விஸ்ட்!




நவம்பர் 3- ஆம் தேதி முதல் பட்டாசுகள் விற்பனை
சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் திறப்பது தொடர்பாக சென்னை பட்டாசு வியாபாரிகள் சங்கத்தின் செயல் தலைவர் ஷேக் அப்துல்லா கூறுகையில், தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கு 30 வியாபாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, கடந்த 2 நாட்களாக கடைகள் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் நாளை மறுநாள் நவம்பர் 2- ஆம் தேதி (திங்கள் கிழமை) முடிக்கப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து, நவம்பர் 3- ஆம் தேதி முதல் பட்டாசு விற்பனை தொடங்கி நடைபெற உள்ளது.
பட்டாசுகளை முன்னதாகவே வாங்கிக் கொள்ளவும்
பட்டாசுகள் விற்பனையானது நவம்பர் 10- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த ஆண்டு பட்டாசு விலை சுமார் 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அதிக அளவிலான பட்டாசு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது. இதனால், பட்டாசு உற்பத்தி குறைந்துள்ளது. இதனால், தேவையான அளவுக்கு பட்டாசு கிடைக்கவில்லை. எனவே, விரும்பிய ரக பட்டாசுகள் முன்னதாகவே வாங்கிக் கொள்ளுமாறு தெரிவித்தார்.
மேலும் படிக்க: தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லும் ரயில் பயணிகளுக்கு முக்கிய எச்சரிக்கை! பட்டாசு, பெட்ரோல் எடுத்துச் சென்றால் 3 ஆண்டுகள் சிறை!