AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லும் ரயில் பயணிகளுக்கு முக்கிய எச்சரிக்கை! பட்டாசு, பெட்ரோல் எடுத்துச் சென்றால் 3 ஆண்டுகள் சிறை!

ரயில்களில் பட்டாசுகள், வெடிபொருட்கள், பெட்ரோல், மண்ணெண்ணெய், எல்பிஜி சிலிண்டர்கள் உள்ளிட்ட எளிதில் தீப்பற்றக்கூடிய மற்றும் வெடிக்கும் தன்மை கொண்ட பொருட்களைக் கொண்டு செல்ல முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய பொருட்கள் ரயிலில் தீ விபத்து அல்லது வெடிப்பு ஏற்படுவதற்குக் காரணமாக அமையக்கூடும் என்பதால், பயணிகள் அவற்றைத் தங்களது உடைமைகளில் எடுத்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லும் ரயில் பயணிகளுக்கு முக்கிய எச்சரிக்கை! பட்டாசு, பெட்ரோல் எடுத்துச் சென்றால் 3 ஆண்டுகள் சிறை!
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 31 Oct 2026 09:15 AM IST

அக்டோபர் 31, 2026: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பட்டாசுகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய ஆபத்தான பொருட்களைக் கொண்டு செல்லக் கூடாது என தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்லத் திட்டமிட்டு வருகின்றனர்.

இதனால் ரயில்களில் பயணிகளின் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, குடும்பத்துடன் பயணம் மேற்கொள்பவர்கள் தங்களது உடைமைகளுடன் பல்வேறு பொருட்களையும் எடுத்துச் செல்வது வழக்கம். இத்தகைய சூழலில், பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் இந்த முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

ரயிலில் இந்த பொருட்களை எடுத்துச்செல்லக்கூடாது

அதன்படி, ரயில்களில் பட்டாசுகள், வெடிபொருட்கள், பெட்ரோல், மண்ணெண்ணெய், எல்பிஜி சிலிண்டர்கள் உள்ளிட்ட எளிதில் தீப்பற்றக்கூடிய மற்றும் வெடிக்கும் தன்மை கொண்ட பொருட்களைக் கொண்டு செல்ல முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய பொருட்கள் ரயிலில் தீ விபத்து அல்லது வெடிப்பு ஏற்படுவதற்குக் காரணமாக அமையக்கூடும் என்பதால், பயணிகள் அவற்றைத் தங்களது உடைமைகளில் எடுத்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: சென்னை புறநகர் ரயில் பயணிகள் கவனத்திற்கு.. நவ.1 முதல் அமலுக்கு வரும் புதிய ரயில் கால அட்டவணை.. முழு விவரம் இதோ!

மேலும், பயணிகள் தங்களது பயணப் பெட்டிகளில் என்னென்ன பொருட்களை எடுத்துச் செல்கிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். தெரியாமல் கூட தடை செய்யப்பட்ட பொருட்களை ரயிலில் கொண்டு செல்லக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.

சட்டப்படி என்ன தண்டனை?

இந்த விதிமுறைகளை மீறுபவர்கள் மீது ரயில்வே சட்டம், 1989-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக, பிரிவு 67-ன் கீழ் ஆபத்தான மற்றும் வெடிக்கும் தன்மை கொண்ட பொருட்களைக் கொண்டு செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனை மீறி ஆபத்தான பொருட்களைக் கொண்டு செல்பவர்கள் மீது பிரிவு 164-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படலாம்.

மேலும் படிக்க: தீபாவளி பண்டிகை.. ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டண வசூலை தடுக்க சிறப்பு படைகள் அமைப்பு!

இதன்படி, விதிமீறலில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ரூ.1,000 வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம். மேலும், அத்தகைய பொருட்களால் ரயில்வேக்கு அல்லது பிறருக்கு ஏற்படும் இழப்பு, காயம் மற்றும் சேதத்திற்கும் சம்பந்தப்பட்ட நபர் பொறுப்பேற்க வேண்டியிருக்கும்.

பயணிகள் கவனிக்க வேண்டியவை!

ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் அல்லது தடை செய்யப்பட்ட வெடிபொருட்கள் எடுத்துச் செல்லப்படுவதைக் கண்டால் உடனடியாக ரயில்வே பாதுகாப்புப் படையினரிடம் (RPF) அல்லது ரயில்வே காவல்துறையினரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.

தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகளைப் பாதுகாப்பாகக் கையாள்வது மிகவும் அவசியம். குறிப்பாக, ரயில் பயணத்தின்போது ஒரு சிறிய தீப்பொறி கூட பெரும் விபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், பயணிகள் இந்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றி ரயில்வே நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெற்கு ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.

Follow Us