AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நகைப்பிரியர்கள் ஹாப்பி நியூஸ்! தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைவு.. ஒரு கிராம் ரூ. 13,000 கீழ் விற்பனை..

Gold Rate In Chennai: அக்டோபர் 31ஆம் தேதியான இன்று சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.310 குறைந்து ரூ.12,730-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.2,480 குறைந்து ரூ.1,01,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

நகைப்பிரியர்கள் ஹாப்பி நியூஸ்! தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைவு.. ஒரு கிராம் ரூ. 13,000 கீழ் விற்பனை..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 31 Oct 2026 10:08 AM IST

அக்டோபர் 31, 2026: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருவது நகைப்பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை அதிரடியாகக் குறைந்து வரும் நிலையில், இன்று (அக்டோபர் 31) ஒரே நாளில் ஒரு கிராம் தங்கம் ரூ.310 குறைந்துள்ளது. இதன் மூலம் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.13,000-க்கும் கீழ் சரிந்துள்ளது.

கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,000-ஐக் கடந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனால் நடுத்தரக் குடும்பத்தினர் மற்றும் திருமணத்திற்காக நகை வாங்கத் திட்டமிட்டிருந்தவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த நிலையில், தற்போது தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருவது நகை வாங்குவோருக்கு ஓரளவு நிம்மதியை அளித்துள்ளது.

சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!

அக்டோபர் 31ஆம் தேதியான இன்று சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.310 குறைந்து ரூ.12,730-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.2,480 குறைந்து ரூ.1,01,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 24 கேரட் சுத்தத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.13,887 ஆகவும், ஒரு சவரன் ரூ.1,11,096 ஆகவும் உள்ளது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரையில், ஒரு கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.200-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க: நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்.. என்ன என்ன தெரியுமா?

தங்கம் விலை திடீரென குறைய என்ன காரணம்?

2026ஆம் ஆண்டு தொடங்கியது முதலே தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் பல்வேறு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, முதலீட்டாளர்களின் அதிகப்படியான முதலீடு மற்றும் பாதுகாப்பான முதலீடாகத் தங்கத்தின் மீதான ஆர்வம் அதிகரித்ததால் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. ஆனால், அக்டோபர் மாதத்தில் இருந்து சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை சரிவைச் சந்திக்கத் தொடங்கியுள்ளது.

இதற்கு முக்கியக் காரணமாக அமெரிக்காவின் பொருளாதார நிலவரம் மற்றும் அந்நாட்டின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வின் வட்டி விகிதம் தொடர்பான எதிர்பார்ப்புகள் அமைந்துள்ளன. அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில், டிசம்பர் மாதத்தில் பெடரல் ரிசர்வ் மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

மேலும் படிக்க: வீட்டுக் கடன், வாகன கடன் EMI செலுத்துபவர்களுக்கு சிக்கல்.. ஆர்பிஐ எடுக்கப்போகும் முக்கிய முடிவு!

பொதுவாக வட்டி வருவாய் வழங்காத தங்கத்தை விட, வட்டி வருவாய் கிடைக்கும் முதலீடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கும்போது தங்கத்தின் மீதான முதலீட்டு ஆர்வம் குறையும். இதன் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கம் விற்பனை அதிகரித்து விலை சரிவைச் சந்தித்து வருகிறது.

 

Follow Us