AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தெய்வீக ஆல்பம்.. மூக்குத்தி அம்மன் 2 படத்தின் முழு பாடல் தொகுப்பு வெளியீடு!

Mookuthi Amman 2: தென்னிந்திய சினிமாவில் 2026ம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தெய்வீக திரைப்படங்களில் ஒன்றுதான் மூக்குத்தி அம்மன் 2. இதை இயக்குநர் சுந்தர் சி இயக்கியுள்ள நிலையில், ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். இவரின் இசையில் பின்னணி இசை மற்றும் பாடல்கள் எல்லாமே முழு தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ளது.

தெய்வீக ஆல்பம்.. மூக்குத்தி அம்மன் 2 படத்தின் முழு பாடல் தொகுப்பு வெளியீடு!
மூக்குத்தி அம்மன் 2Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 31 Oct 2026 11:16 AM IST

நடிகை நயன்தாரா (Nayanthara) தமிழில் நடித்துவந்த பிரம்மாண்டமான திரைப்படங்களில் ஓன்றுதான் மூக்குத்தி அம்மன் 2 (Mookuthi Amman 2 Movie). இந்த படமானது 2020ம் ஆண்டில் ஆர்.ஜே.பாலாஜியின் (RJ Balaji) இயக்கத்தில் வெளியான மூக்குத்தி அம்மன் படத்தின் தொடர்ச்சி இல்லை. அதற்கு பதிலாக அதே டைட்டிலில் உருவான மற்றொரு கதைக்களம் கொண்ட திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்குநர் சுந்தர் சி (Director Sundar C) இயக்கியுள்ள நிலையில், பல்வேறு நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி (Hiphop Aadhi) இசையமைத்துள்ளார்.

இவரின் இசையில் இப்படத்தில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை உள்ளிட்ட பிரம்மாண்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை இப்படத்தில் இருந்து சிங்கிள் என்று எதுவும் வெளியாகவில்லை என்ற நிலையில், இந்த படத்தின் பாடல்கள் மற்றும் தீம் பாடல்களை எல்லாவற்றையும் தொகுத்து முழு ஆல்பமாக படக்குழு பகிர்ந்துள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: 2027 பொங்கலுக்கு குறிவைக்கும் பா. ரஞ்சித்தின் வேட்டுவம் திரைப்படம் – வெளியான அறிவிப்பு!

மூக்குத்தி அம்மன் 2 படத்தின் முழு ஆல்பம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

மூக்குத்தி அம்மன் 2 படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் அப்டேட்:

இந்த திரைப்படத்த்தில் நடிகை நயன்தாரா லீட் நாயகியாக நடித்துள்ளார். இவர் இப்படத்தில் போலீஸ் மற்றும் அம்மன் என இரு வேடத்தில் நடித்துள்ளார். ஏற்கனவே மூக்குத்தி அம்மன் 1 படத்தில் இவர் நாயகியாக நடித்திருந்த நிலையில், சிறப்பான வரவேற்பு கிடைத்திருந்தது. அதற்கு பின் மீண்டும் அம்மனாக இந்த மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் இவருடன் ரெஜினா, சிங்கம் புலி, ஊர்வசி, சுனில் மற்றும் பல்வேறு நட்சத்திர நடிகர்களும் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க: என் தங்கப்புள்ள.. ஜீவாவின் தகப்பன் படத்திலிருந்து வெளியான ஃபர்ஸ்ட் சிங்கிள்..!

இப்படம் வரும் 2026ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதியில் உலகமெங்கும் வெளியாக காத்திருக்கிறது. அந்த விதத்தில் இப்படத்திற்கு சென்சார் குழு யு/ஏ தர சென்சார் சான்றிதழை கொடுத்துள்ளாராம். இப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணிநேரம் 25 நிமிடங்கள் என்றும் கூறப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு பிரம்மாண்டமான ஒரு அம்மன் திரைப்படமாக இது உருவாகியுள்ள நிலையில், 2026ம் ஆண்டு தீபாவளிக்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us