AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

2027 பொங்கலுக்கு குறிவைக்கும் பா. ரஞ்சித்தின் வேட்டுவம் திரைப்படம் – வெளியான அறிவிப்பு!

Pa. Ranjiths Vettuvam Movie: தென்னிந்திய மொழி சினிமாவில் பேமஸான இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் பா.ரஞ்சித். இவரின் இயக்கத்தில் தமிழில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுவரும் திரைப்படம்தான் வேட்டுவம். இப்படம் மல்டி ஸ்டார் படமாக உருவாக்கப்பட்டுவரும் நிலையில், இப்படத்தின் ரிலீஸ் குறித்து படக்குழு அப்டேட் கொடுத்துள்ளது.

2027 பொங்கலுக்கு குறிவைக்கும் பா. ரஞ்சித்தின் வேட்டுவம் திரைப்படம் – வெளியான அறிவிப்பு!
வேட்டுவம் திரைப்பட வெளியீடுImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 31 Oct 2026 10:32 AM IST

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநர்களில் வரிசையில் ஒருவராக இருந்துவருபவர் பா. ரஞ்சித் (Director Pa.Ranjith). இவரின் இயக்கத்தில் கோலிவுட் சினிமாவில் தொடர்ந்து புதிய திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இறுதியாக இவரின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தங்கலான் (Thangalaan). சியான் விக்ரம் (Chiyaan Vikram) நடிப்பில், பேண்டஸி கதைக்களத்தில் வெளியான இந்த திரைப்படம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பிறகு இயக்குநர் பா. ரஞ்சித் இயங்கிவந்த திரைப்படம்தான் வேட்டுவம் (Vettuvam Movie). இப்படத்தில் ஆர்யா (Arya) அட்டகத்தி தினேஷ், சோபிதா துளிபலா மற்றும் பல்வேறு நட்சத்திர நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில், படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்களும் சிறப்பாக அமைந்துள்ளதாம். இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து படக்குழு அப்டேட் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: என் தங்கப்புள்ள.. ஜீவாவின் தகப்பன் படத்திலிருந்து வெளியான ஃபர்ஸ்ட் சிங்கிள்..!

பா. ரஞ்சித்தின் வேட்டுவம் திரைப்படத்தின் ரிலீஸ்:

இந்த வேட்டுவம் திரைப்படமானது அறிவியல் புனைகதைகள் மற்றும் தலைமைக்காக போட்டியிடும் அதிரடி ஆக்ஷன் போன்ற கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஆர்யா மற்றும் அட்டகத்தி தினேஷ் இருவருமே லீட் நடிகர்களாக படத்தில் நடித்துள்ளனர்.

அந்த வகையில் இந்த ஆக்ஷன் திரைப்படமானது வரும் 2027ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. ஆனால இன்னும் இதன் ரிலீஸ் தேதியை படக்குழு குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வேட்டுவம் திரைப்படத்தின் ரிலீஸ் குறித்து இயக்குநர் பா. ரஞ்சித் வெளியிட்ட எக்ஸ் பதிவு:

தங்கலான் திரைப்படத்தை போலவே இந்த வேட்டுவம் திரைப்படமானது வித்தியாசமான கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளதாம். இப்படமானது கிட்டத்தட்ட ஹாலிவுட் திரைப்படத்தை போலவே இருக்கும் என கூறப்படுகிறது. ஒரு தலைமை பொறுப்பை அடைவதற்கு கற்காலம் முதல் இக்காலம் வரை மனிதர்கள் இடும் போட்டி குறித்த கதையை மையப்படுத்தி இயக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: தமிழகம் முழுவதும் 3,000 சட்ட ஆலோசகர்கள்? தனுஷ் நற்பணி இயக்கத்தின் அடுத்த நகர்வு எனத் தகவல்

இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள நிலையில், விரைவில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை குறித்த தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும் 2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாக தயாராகிவரும் நிலையில், நிச்சயம் வரவேற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us