எனது வாழ்நாள் முழுக்க தெலுங்கு சினிமாவுக்கு அதற்காக நன்றியோடு இருப்பேன் – ஸ்ருதிஹாசன்!
Shruti Haasan: பாலிவுட் சினிமாவின் மூலம் நடிகையாக நுழைந்து, தற்போது தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் ஸ்ருதிஹாசன். இவர் முன்பு நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த நிலையில், அதில் தெலுங்கு சினிமா தனக்கு கொடுத்த ஆதரவு குறித்து மனம் திறந்துள்ளார்.
தென்னிந்திய மொழிகளில் நடிகையாக நடித்துவருபவர்தான் ஸ்ருதிஹாசன் (Shruti Haasan). உலக நாயகனாக கமல்ஹாசனின் (Kamal Haasan) மூத்த மகளான இவர், இந்தி சினிமாவின் மூலம் சினிமாவில் நடிகையாக நுழைந்தார். 2009ம் ஆண்டில் வெளியான லக் (Luck) என்ற படத்தின் மூலம் முதல் முதலாக சினிமாவில் நாயகியாக நடித்திருந்தார். அதற்கு முன் “ஹே ராம்” (Hey Ram) என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக இவர் நடித்திருந்தார். இவராக தனது சினிமா வாழ்க்கையை நடிகை ஸ்ருதிஹாசன் ஆரம்பித்திருந்தார். இதற்கு பின் இவருக்கு தெலுங்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்த நிலையில், “அங்கங்க ஓ தீருடு” (Anaganaga O Dheerudu) என்ற படத்தில் நடித்திருந்தார். இதற்கு பின் தெலுங்கில் இவருக்கு ஒரு அங்கீகாரமாக அமைந்த திரைப்படம் கப்பர் சிங்.
இந்த படத்தில் இவர் நடிகர் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடித்திருந்தார் இதுவே இவருக்கு தெலுங்கு சினிமாவில் சிறப்பான அங்கீகாரத்தை கொடுத்திருந்தது. இதற்க்கு பின் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலுமே நடிக்க தொடங்கிவிட்டார். அந்த விதத்தில் முன்பு ஒரு நேர்காணலில் பேசிய ஸ்ருதிஹாசன், தெலுங்கு சினிமா குறித்து பெருமையாக பேசியுள்ளார்.




இதையும் படிங்க: பார்வதியின் நடிப்பில் வெளியான பிரதம திருஷ்டிய குட்டக்கர் படம் எப்படி இருக்கு? ஓடிடி விமர்சனம் இதோ!
நடிகை ஸ்ருதிஹாசனின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:
View this post on Instagram
தெலுங்கு சினிமா குறித்து ஸ்ருதிஹாசன் பேசிய விஷயம்:
அண்ட் நேர்காணலில் பேசிய ஸ்ருதிஹாசன், “நான் தெலுங்கில் கப்பர் சிங் என்ற ஒரு திரைப்படம் பண்ணினேன். அந்த படத்திற்கு முன்பு, ஸ்ருதிஹாசன் என்ன பண்ண போகிறார், என்ன திட்டம் வைத்திருக்கிறார் என்பது யாருக்குமே தெரியாது. கப்பர் சிங் படமானது தெலுங்கில் மாபெரும் ஹிட்டாச்சு. எனது சினிமா கெரியரையே ஒரே இரவில் மாற்றிய திரைப்படம் இது. தெலுங்கு சினிமாவில் ஒரே இரவில் நான் பாக்கியலட்சுமியாகிவிட்டேன்.
இதையும் படிங்க: இந்த போட்டோவில் கியூட்டாக இருக்கும் சிறுமி யார் தெரியுமா? இவர் பான் இந்திய பிரபல நடிகை!
அந்த படத்திற்கு பிறகு எனக்கு வந்த படங்கள், கதாபாத்திரங்கள் மற்றும் வேடங்கள் எல்லாமே பவர்ஃபுல்லாக இருந்தது. பொழுதுபோக்காகவும், நடிப்பு வாரியாகவும் எனக்கு நல்ல படங்கள் அமைந்தது. நான் காமெடி மற்றும் ஆக்ஷன் படங்களிலும் நடிக்க ஆரம்பித்தேன். ஒரு நடிகர்களை எங்கே ஏற்றுக்கொள்கிறார்களோ, எங்க அவர்களை அங்கீகரிக்கிறார்களோ அது இயற்கையாகவே அங்கு அதிக படங்கள் செய்ய தோன்றும். நான் ஒரு தெலுங்கு பொண்ணு கிடையாது, ஆனால் ஒரு தெலுங்கு பெண்ணாகவே என்னை ஏற்றுக்கொண்டு எனக்கு நிறைய வாய்ப்புகள் கொடுத்தனர். அதனால் எனது வாழ்நாள் முழுக்க தெலுங்கு சினிமாவிற்கு நன்றியோடு இருப்பேன்” என அதில் அவர் கூறியிருந்தார்.