இது ஒரு தொடர்கதை அல்ல… ஓம் படம் பார்ட் 2 உருவாகுமா என்பது குறித்து ராஜ்குமார் பெரியசாமி விளக்கம்!
Rajkumar Periasamy on Om 2: தனுஷின் நடிப்பிலும், தயாரிப்பிலும் உருவாகியுள்ள புதிய திரைப்படம்தான் ஓம். இதை அமரன் திரைப்பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள நிலையில், 2026 நவம்பர் இறுதியில் வெளியாகிறது. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய ராஜ்குமார் பெரியசாமி, ஓம் பார்ட் 2 படம் உருவாகுமா என்பது குறித்து பேசியுள்ளார்
கோலிவுட் சினிமாவில் கௌதம் ராம் கார்த்திக்கின் ரங்கூன் என்ற திரைப்படத்தை இயக்கி, இயக்குநராக நுழைந்தவர் ராஜ்குமார் பெரியசாமி ( (Director Rajkumar Periasamy). இவருக்கு முதல் படமாக அமைந்த இரு ஓரளவு வரவேற்பை கொடுத்தது. இந்த படத்திற்கு பின், பல ஆண்டுகளுக்கு பிறகு இவருக்கு கம்பேக் திரைப்படமாக அமைந்ததுதான் அமரன் (Amaran Movie). சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) மற்றும் சாய் பல்லவி (Sai Pallavi) இணைந்து இந்த படத்தில் நடித்திருந்த நிலையில், நிஜ கதையை மையப்படுத்தி இப்படமானது எடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்தின் வெற்றியை அடுத்ததாக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இணைந்த திரைப்படம்தான் ஓம். இந்த படத்தில் தனுஷ் (Dhanush), மம்முட்டி (Mammootty), சாய் பல்லவி (Sai Pallavi) மற்றும் ஸ்ரீலீலா (Sreeleela) உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர்.
இந்த படமானது உண்மையான கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளதாம். இதன் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் உள்ளது. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேசியிருந்த நிலையில், ஓம் பார்ட் 2 படம் உருவாகுமா என்பது குறித்து அவர் பேசியுள்ளார். அது குறித்த தகவல் இணையத்தில் பரவிவருகிறது.




இதையும் படிங்க: சூர்யாவின் சீன் படத்திற்கு கிடைத்த சென்சார் சான்றிதழ் என்ன தெரியுமா? வெளியானது அப்டேட்
ஓம் திரைப்படத்தின் பார்ட் 2 திரைப்படம் உருவாகுமா என்பது குறித்து விளக்கம் அளித்த ராஜ்குமார் பெரியசாமி:
சமீபத்தில் ஓம் திரைப்படம் தொடர்பாக நேர்காணல் ஒன்றில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி கலந்துகொண்டார். அந்த நேர்காணலின்போது பேசிய அவர், “ஓம் படத்தின் டைட்டில் உள்ள அத்தியாயம் 1 என்பது பாகம் 2 வரும் என்று உங்களை எதிர்பார்க்க வைக்கக்கூடாது; பார்ட் 1 மற்றும் பார்ட் 2-க்கும் எந்த சம்பந்தமும் இல்ல. இது ஒரு தொடர்கதை அல்ல. கதை இந்த அத்தியாயத்திலேயே முடிவடைகிறது. மம்மூட்டி சாரின் கதாபாத்திரத்தை ஒரு பாதாள உலக டான் என்ற வழக்கமான, குறுகிய பிம்பத்திற்குள் அடக்கிவிட முடியாது என அதில் அவர் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: நிஜமாகவே அன்லக்கிதான் போல.. பிக் பாஸில் ரூட் எடுக்கும் புது லவ் ஸ்டோரி – வைரலாகும் ப்ரோமோ!
ஓம் திரைப்படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:
The Day for the Ultimate Strike is Here 💥
#OM Hits theatres worldwide on November 20, 2026.
A @Rajkumar_KP Film.
@dhanushkraja @mammukka @Sai_Pallavi92 @RTakeStudios @wunderbarfilms @SaiAbhyankkar #NaseeruddinShah @sreeleela14 @Shra2309 @azy905 @theSreyas @sandy_sashr @vishurams @Ezhil_DOP @kalaivananoffl @iamSandy_Off @kavya_sriram @kabilanchelliah @rajeevan69 @JamRokr @kuchirayar73 @WarnerMusicIN @divomusicindia @ManojMaddyMM @RIAZtheboss @parasriazahmed1 @teamaimpr
— Wunderbar Films (@wunderbarfilms) October 2, 2026
இந்த ஓம் படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார். இவரின் இசையில் இதுவரை இப்படத்திலிருந்து 2 சிங்கிள் வெளியாகியுள்ள நிலையில், சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த படத்தில் சாய் பல்லவியின் கதாபாத்திரமானது மக்கள் மத்தியில் சிறப்பான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த படம் வரும் 2026ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் அப்டேட்டுகள் மற்றும் ஆடியோ லான்ச் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.