AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Vatsala Rajagopal: திரையுலகில் சோகம்… பிரபல நடிகை வத்சலா ராஜகோபால் உடல்நலக்குறைவின் காரணமாக காலமானார்!

Vatsala Rajagopals Demise: மேடை நாடகங்கள் மூலமாக தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்திவந்தவர் நடிகை வத்சலா ராஜகோபால். இவர் இன்று (30/10/2026) உடல்நல குறைவு மற்றும் வயது மூப்பின் காரணமாக காலமானார். இவரின் இறப்பு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் சினிமா பயணம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Vatsala Rajagopal: திரையுலகில் சோகம்… பிரபல நடிகை வத்சலா ராஜகோபால் உடல்நலக்குறைவின் காரணமாக காலமானார்!
வத்சலா ராஜகோபால் மறைவுImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 30 Oct 2026 14:08 PM IST

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை வத்சலா ராஜகோபால் (Actress Vatsala Rajagopal). இவர் சினிமாவில் நடிப்பதற்கு முன்பே, கிட்டத்தட்ட 450-க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்திருக்கிறார். கடந்த 1992ம் ஆண்டில் வெளியான ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். இவ்வாறு பிரபலம் கொண்ட நடிகை வத்சலா ராஜகோபால் (93), இன்று (30/10/2026) வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவின் காரணமாக காலமானார். இவரின் இறப்பு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடிகர்கள் மற்றும் நடிகைகளில்ன் பாட்டியாக நடித்து மக்களிடையே பிரபலமானவர்.

அந்நியன் படத்தில் (Anniyan Movie) விக்ரமின் பட்டியாகவும் அவருக்கு கதையை கொள்பவராகவும் இவரே நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த விதத்தில் இவரின் இறப்பு மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மாரி செல்வராஜின் மஞ்சணத்தி படத்தின் ஃபர்ஸ்ட் ஷெட்யூல் ஷூட்டிங் ஓவர்!

சினிமாவில் நடிகை வத்சலா ராஜகோபாலின் பிரபலம்:

தமிழ் சினிமாவில் தனது இயல்பான நடிப்பு மற்றும் கதாபாத்திரங்களில் தனது நேர்த்தியான நடிப்பின் மூலம் மக்கள் மத்தியில் என்றென்றும் நீங்கா இடத்தை பிடித்திருப்பவர்தான் நடிகை வத்சலா ராஜகோபால். இவர் நாடக மேடைகளிலிருந்து, திரையுலகில் நுழைந்தவர். தனது நேர்த்தியான நடிப்பின் மூலம் பல்வேறு படங்களில் நடிகர்கள் மற்றும் நடிகைகளில் பாட்டியாக நடித்திருக்கிறார்.

இதையும் படிங்க: இங்க சாப்பாட்டுக்குத்தான் சண்டையே… பிக் பாஸில் மோதலில் ஈடுபட்ட முகேஷ் – ஜேசன்!

மேடை நாடகங்கள் மூலம் பிரபலமான இவருக்கு முதல் சினிமா வாய்ப்பே அவரின் 60 வயதில்தான் கிடைத்திருந்தது. இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் ரோஜா சென்ற படத்தில் மதுபாலாவுக்கு படியாக இவரே நடித்திருந்தார். இவருக்கு முதல் சினிமா அறிமுகமே 60வது வயதில் இருந்த நிலையில், இவருக்கென தனி சிறப்பு இருந்தது.

நடிகை வத்சலா ராஜகோபால் தமிழில் நடித்த திரைப்படம் மற்றும் சீரியல்கள்:

ரோஜா திரைப்படத்திற்கு பின் திருடா திருடி, சதி லீலாவதி, காதல் வாழ்க, ரிதம், அந்நியன், மொழி மற்றும் வின்னர் என 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் சினிமாவில் மட்டுமல்லாமல் சீரியல்களிலும் நடித்துள்ளார். ஆனந்தம், சித்தி, முந்தானை முடிச்சு என பல்வேறு சீரியல்களிலும் இவர் நடித்திருக்கிறார். சின்னத்திரை, சினிமா மற்றும் மேடை நாடகங்கள் என பல்வேறு துறைகளிலும் தனது ஈடுபாட்டை வத்சலா ராஜகோபால் காட்டிவந்தார். இந்நிலையில் இன்று (30/10/2026) வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இவரின் இறப்பு ஒட்டுமொத்த திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us