Ilaiyaraaja: நான் பார்க்கவிரும்பவில்லை… பிரபலங்களின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளாதது குறித்து இளையராஜா விளக்கம்!
Ilaiyaraajas Emotional Reason: தென்னிந்திய சினிமாவில் பழம்பெரும் இசையமைப்பாளராக இருந்துவருபவர் இசைஞானி இளையராஜா. இவர் சமீபத்தில் இசைக்கலைஞர் சதானந்தம் இறப்புக்கு இரங்கல் தெரிவித்து வீடியோவை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் பிரபலங்களில் இறப்பில் ஏன் கலந்துகொள்வதில்லை என்பது குறித்து அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.
கோலிவுட் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடிவரும் இசையமைப்பாளராக இருந்துவருபவர் இசைஞானி இளையராஜா (Ilaiyaraaja). கடந்த 1976ம் ஆண்டில் வெளியான அன்னக்கிளி (Annakili Movie) என்ற திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக சினிமாவில் நுழைந்திருந்தார். இந்த படத்தின் மூலமாக இசையமைப்பாளராக நுழைந்த நிலையில், கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் பணியாற்றிவருகிறார். 50 ஆண்டுகளை கடந்து இன்னும், தற்போது 2கே ஜெனரேஷனிலும் அவர் படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றிவருகிறார். இறுதியாக இவர் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் (Karthik Subbaraj) இயக்கத்தில் வெளியான டோரதி (Dorothy) படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தில் பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் சிறப்பாக அமைந்திருந்தது.
இன்று (29/10/2026) பிரபல கிட்டாரிஸ்ட் சதானந்தம் (Guitarist Sadanandham) காலமான நிலையில், அவருக்கு இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் பேசிய இளையராஜா, தான் எதற்காக பிரபலங்களின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதில்லை என்பது குறித்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அதற்காக மட்டும் நான் படம் எடுக்கும் ஆள் கிடையாது.. வெளிப்படையாக சுந்தர் சி பகிர்ந்த விஷயம்!
பிரபலங்களின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளாத காரணம் குறித்து இளையராஜா விளக்கம்:
சமீபத்தில் பிரபல கிட்டாரிஸ்ட் சதானந்தம் இறப்புக்கு இளையராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டு இரங்கல் தெரிவித்திருந்தார். அந்த வீடியோவில் சதானந்தம் குறித்து பேசிய இளையராஜா, பிரபலங்களின் இறப்பு செல்லாத காரணம் குறித்தும் பேசியுள்ளார். அதில் பேசிய இளையராஜா, “என்னால் காலமானவர்களின் வீட்டிற்கு செல்ல முடியாது.. அவர்களை அந்த நிலைமையில் பார்த்தது கிடையாது.. பார்ப்பதை நான் விரும்புவதில்லை. ஏனென்றால் அவர்கள் என்னுடன், உயிருடன் வாழ்ந்தவர்கள். உணர்வுடன் கலந்தவர்கள்.. சதானந்தம் ஆன்மா சாந்தியடைய எல்லமல்ல இறைவனை பிராத்திக்கிறேன்” என அதில் அவர் வெளிப்படையாக பேசியிருந்தார். தற்போது இது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது. மேலும் இளையராஜாவின் கூற்றுக்கு பலரும் ஆதரவு தெரிவித்துவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இளையராஜாவின் கிட்டாரிஸ்ட் சதானந்தம் மறைவு:
இளையராஜாவின் முதல் படமான அன்னக்கிளி திரைப்படத்திலிருந்து, அவருடன் கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் பயணித்தவந்தவர் சதானந்தம். இவர் இசையமைப்பாளர் சுதர்சனத்தின் மகன் ஆவார்.
இதையும் படிங்க: இளையராஜாவின் கிட்டார் இசைக்கலைஞர் சதானந்தம் காலமானார்!!
இவர் சினிமாவில் கிட்டாரிஸ்ட்டாக பல வருடங்கள் பணியாற்றிவந்த நிலையில், சதா மாஸ்டர் என்று இசைக் கலைஞர்களால் அறியப்பட்டவர். அவர் தனது உடல்நல பாதிப்பு மற்றும் வயது மூப்பு காரணமாக இன்று (29/10/2026) தனது 79வது வயதில் காலமானார். அந்த விதத்தில் அவரின் இறப்புக்கு பல்வேறு இசைக் கலைஞர்கள் மற்றும் பிரபலங்களும் இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



