Benz Movie: ராகவா லாரன்ஸ் பர்த்டே.. ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்ட பென்ஸ் படக்குழு!
Raghava Lawrence 50th Birthday: தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் ராகவா லாரன்ஸ். இவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பிலும், இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்திலும் பென்ஸ் படத்தில் லீட் நாயகனாக நடித்துவருகிறார். இன்று (29/10/2026) அவர் தனது பிறந்தநாளை கொண்டாடிவரும் நிலையில், பென்ஸ் படக்குழு ஸ்பெஷல் போஸ்டரை பகிர்ந்துள்ளது.
தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகராக இருந்துவருபவர் ராகவா லாரன்ஸ் (Raghava Lawrence). இவர் சினிமாவில் நடன இயக்குநராக நுழைந்து, பின் நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பல்வேறு பணிகளை சிறப்பாக செய்துவருகிறார். இவரின் இயக்கத்தில் தமிழில் காஞ்சனா படங்களின் தொடர்ச்சியானது சிறப்பாக உருவாக்கப்பட்டுவருகிறது. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் (Jigarthanda DoubleX). இந்த படத்திற்கு பின் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக எந்த படங்களும் திரையரங்குகளில் வெளியாகவில்லை. அந்த விதத்தில் இவர் தனது கைவசத்தில் தொடர்ந்து பிரம்மாண்ட படங்களை வைத்துள்ளார். தமிழில் லோகேஷ் கனகராஜின் (Lokesh Kanagaraj) LCU- தொகுப்பில் ஒரு பகுதியாக உருவாகும் பென்ஸ் (Benz Movie) படத்தில் நாயகனாக ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் (Director Bakkiyaraj Kannan) இயக்க, லோகேஷ் கனகராஜ் மற்றும் பேஷன் ஸ்டூடியோஸ் போன்ற நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.
இந்த படத்தின் ஷூட்டிங் இன்னும் நடைபெற்றுவரும் நிலையில், 2027ல் இப்படம் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று (29/10/2026) நடிகர் ராகவா லாரன்ஸ் தனது 50வது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அந்த விதத்தில் பென்ஸ் படத்திலிருந்து சிறப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது.




இதையும் படிங்க: என்ன சொல்வதென்றே தெரியல.. பெடி பட தனது கதாபாத்திரத்தின் மீது எழுந்த விமர்சனம் குறித்து ஜான்வி கபூர் ஓபன்!
ராகவா லாரன்ஸின் பிறந்தநாளை முன்னிட்டு பென்ஸ் படத்திலிருந்து வெளியன் ஸ்பெஷல் போஸ்டர்:
Wishing the powerhouse of talent and energy, our very own @offl_Lawrence Master, a very Happy Birthday ❤️🔥
Here’s to a fantastic year ahead and all the magic we’re set to create with #BENZ https://t.co/yr7w4Jphi4
— Passion Studios (@PassionStudios_) October 29, 2026
இந்த பென்ஸ் படத்தை இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்குநராக இயக்க, மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுவருகிறது. இப்படமானது லோகேஷ் கனகராஜின் LCU பட தொகுப்பில் ஒரு திரைப்படமாக உருவாக்கப்பட்டுவருகிறது. கைதி, விக்ரம், லியோ ஒன்றா திரைப்படங்களின் வரையில் 4வது படமாக பென்ஸ் அமைந்துள்ளது. இந்த படத்தில் ராகவா லார்சன் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா மேனன் நடித்துள்ளாராம். மேலும் இந்த படத்தில் மெயின் வில்லனாக நடிகர் நிவின் பாலி நடித்துவருகிறார். இவருடன் நடிகர் ரவி மோகன் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: நடிகர் சூர்யாவின் சீன் படத்தின் கதைச் சுறுக்கம் இதுதானா? வைரலாகும் தகவல்
இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துவருகிறார். இவர் இப்படத்தின் மூலமாக முதல் முறையாக இசையமைப்பாளர் என அறிமுகம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுவரும் நிலையில், 2027ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் என வட்டாரங்கள் கூறுகிறது.