AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிக்பாஸில் ஜேசனிடம் அநாகரீகமாக நடந்துக்கொண்ட தன்யா… வைரலாகும் வீடியோ!

Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த 8-வது வாரம் நடைபெறும் டாஸ்கில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் மைனிங் மாஃபியா அணியினர் அவர்களுக்குள்ளே சண்டையிட்டுக்கொள்ளும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

பிக்பாஸில் ஜேசனிடம் அநாகரீகமாக நடந்துக்கொண்ட தன்யா… வைரலாகும் வீடியோ!
பிக்பாஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 29 Oct 2026 13:18 PM IST

தமிழ் சின்னத்திரையில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து தொடர்ந்து போட்டியாளர்களிடையே சண்டை மட்டும் குறையவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் சண்டைக்கு பஞ்சமே இருக்காது என்பது பார்வையாளர்கள் நன்கு அறிந்த விசயம். இந்த நிலையில் இந்த பிக்பாஸ்ஸ் தமிழ் சீசன் 10 (Bigg Boss Tamil Season 10) நிகழ்ச்சியிலும் அந்த சண்டைகளுக்கு குறைவே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கும் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தற்போது 53-வது நாளை எட்டியுள்ளது. இந்த 8-வது வாரம் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு கௌபாய்ஸ் விஸ்சஸ் மைனிங் மாஃபியா என இரண்டு அணியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். இந்த போட்டியில் வெற்றி குறித்து போட்டியாளர்களிடையே சலசலப்பும் ஏற்படுகின்றது.

அதன்படி இந்த போட்டி தொடங்கியதில் இருந்து கௌபாய் அணியினரே அதிக அளவில் போட்டிகளில் வெற்றியைப் பெற்று வருகின்றனர். ஆனால் மைனிங் மாஃபியாவில் உள்ளவர்கள் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் அவர்களுக்குள்ளே சண்டையும் ஏற்பட்டுள்ளது.

பிக்பாஸில் ஜேசனிடம் அநாகரீகமாக நடந்துக்கொண்ட தன்யா:

அதன்படி இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இன்றைய நாளிற்கான இரண்டாவது புரோமோ வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த பிக்பாஸ் போட்டியில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் மைனிங் மாஃபியாவில் உள்ள ஜேசன் மற்றும் தன்யா இடையே சண்டை ஏற்படுகின்றது. அதில் தன்யா அநாகரீகமாக ஜேசனை நோக்கி தனது ஷூவை காட்டுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இன்று இந்த நிகழ்ச்சியில் பரபரப்பிற்கு பஞ்சமே இருக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read… குட் பேட் அக்லி போல டேர் டெவில் தலைப்பையும் அவரே சொன்னார்… ஆதிக் ரவிச்சந்தர்

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… பிக்பாஸில் ஜாலி டாஸ்க் இப்போ சண்டையா போகுது… கடுப்பாகும் பார்வையாளர்கள்!

Follow Us