AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

குட் பேட் அக்லி போல டேர் டெவில் தலைப்பையும் அவரே சொன்னார்… ஆதிக் ரவிச்சந்தர்

Adhik Ravichandran about Daredevil title | இயக்குநர் ஆதிக் ரவிச்சந்தர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் டேர் டெவில் படத்திற்கு தலைப்பு வைத்தது யார் என்பது குறித்து வெளிப்படையாக பேசி உள்ளார். அது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

குட் பேட் அக்லி போல டேர் டெவில் தலைப்பையும் அவரே சொன்னார்… ஆதிக் ரவிச்சந்தர்
அஜித் குமார் - ஆதிக் ரவிச்சந்திரன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 28 Oct 2026 12:41 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்தர். தமிழ் சினிமாவில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் இயக்குநராக அறிமுகம் ஆனார். இவர் இயக்குநராக அறிமுகம் ஆன திரிஷா இல்லனா நயன்தாரா படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பாஹீரா, மார்க் ஆண்டனி மற்றும் குட் பேட் அக்லி ஆகியப் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் இறுதியாக தமிழ் சினிமாவில் வெளியான குட் பேட் அக்லி படம் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் நடிகர் அஜித் குமார் நாயகனாக நடித்து இருந்த நிலையில் அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக மீண்டும் அஜித் குமார் படத்தையே இயக்குகிறார் ஆதிக் ரவிச்சந்தர். இந்தப் படத்தின் ப்ரீ புரடெக்‌ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.

குட் பேட் அக்லி போல டேர் டெவில் தலைப்பையும் அவரே சொன்னார்:

இந்த நிலையில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்தர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்தப் பேட்டியில் குட் பேட் அக்லி மற்றும் டேர்டெவில் ஆகிய தலைப்புகளை அஜித்தான் பரிந்துரைத்தார். இந்தப் படத்தில் பிரபு சார் இருக்க வேண்டும் என்று அஜித் விரும்பினார். அவர்கள் இருவருக்கும் இடையே மிகச் சிறந்த பிணைப்பு உள்ளது. தொடர்ச்சியாகப் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டிருந்தோம், ஆனால் சென்னையில் மழை எப்போது பெய்யும் என்று கணிக்க முடியாத சூழல் நிலவுகிறது. எனவே, இந்தியாவின் பிற பகுதிகளில் நடக்க வேண்டிய படப்பிடிப்பை ஹைதராபாத்தில் வைத்து நடத்த முடிவு செய்துள்ளோம். தீபாவளிக்குப் பிறகு, நவம்பர் 12-ஆம் தேதி காலை 8:05 மணிக்கு படப்பிடிப்பு தொடங்குகிறது.

Also Read… விஜய் ஆண்டனியின் அப்பா குட்டி படத்தின் ஓடிடி உரிமையைப் பெற்றது பிரபல நிறுவனம் – வெளியானது அப்டேட்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… 10 ஆண்டுகளைக் கடந்தது தனுஷின் கொடி படம்… கொண்டாடும் ரசிகர்கள்!

Follow Us