AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

டேர் டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லையா? வைரலாகும் தகவல்

Daredevil Movie Update | தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் 64-வதாக உருவாக உள்ளது டேர் டெவில் படம். இந்தப் படம் தொடர்பான தகவல்கள் தொடர்ந்து சினிமா வட்டாரங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

டேர் டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லையா? வைரலாகும் தகவல்
டேர் டெவில்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 18 Aug 2026 19:48 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் கடந்த 2025-ம் ஆண்டில் அடுத்தடுத்து திரையரங்குகளில் வெளியான இரண்டு படங்களுமே ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதிலும் குறிப்பாக இறுதியாக நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. இப்படி மாபெரும் வெற்றியை கொடுத்த கூட்டணி தான் அஜித் குமார் – இயக்குநர் ஆதிக் ரவிச்சந்தர் கூட்டணி. ஆனால் இவர்களின் கூட்டணி அஜித் குமாரின் 64-வது படத்தில் இணைந்த போது படத்தை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனம் எது என்பது முடிவாக சுமார் 1 ஆண்டுகள் எடுத்துக்கொண்டது. இறுதியில் அஜித் குமாரின் மனைவி ஷாலினி அஜித் குமாரே தயாரிப்பாளராக உருவெடுத்து இந்தப் படத்தை தயாரிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில் இந்தப் படத்திற்கு டேர் டெவில் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் படப்பிடிப்பு மற்றும் படத்தில் நடிக்கும் நடிகர்கள் தொடர்பான அப்டேட்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான தகவல் இணையத்தில் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

டேர் டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லையா?

டேர்டெவில் திரைப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாத இறுதியில் தொடங்கவுள்ளது. இப்படத்தில் அஜித் குமாருக்கு ஒரு முக்கியமான நண்பர் கதாபாத்திரம் உள்ளது. ஆரம்பத்தில் இக்கதாபாத்திரத்திற்காக மோகன்லால் பரிசீலிக்கப்பட்டார். இருப்பினும், சம்பளம் மற்றும் பட்ஜெட் தொடர்பான காரணங்களால் அவரை ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என படக்குழு முடிவு செய்தது. மற்றொரு கதாபாத்திரத்திற்காக சத்யராஜும் பரிசீலிக்கப்பட்டார். ஆனால், முதலமைச்சர் விஜய்யுடன் (அஜித்தின் நெருங்கிய நண்பர்) சத்யராஜ் சமீபத்தில் கொண்டிருந்த கருத்து வேறுபாடு மற்றும் விமர்சனங்கள் காரணமாக, அவரை நடிக்க வைப்பதில் அஜித் குமார் தயக்கம் காட்டினார். ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ராகுலும் இப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Also Read… Sai Abhyankkar: என் வாழ்க்கையில் நான் இழந்த மிகப்பெரிய பகுதி.. முதல்வர் விஜய் குறித்து எமோஷனலாக பேசிய சாய் அபயங்கர்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Sai Pallavi: அப்போ நிவின் பாலி யாருனு தெரியாது? உண்மையை உடைத்த சாய் பல்லவி!

Follow Us