பாக்கெட் நாவல் படத்தின் டப்பிங் பணியைத் தொடங்கிய மாளவிகா மோகனன்!
Malavika Mohanan Starts Dubbing For Pocket Novel | நடிகை மாளவிகா மோகனன் நடிப்பில் அடுத்ததாக தமிழ் மொழியில் வெளியாக உள்ள படம் பாக்கெட் நாவல். இந்தப் படத்தின் டப்பிங் பணிகளை நடிகை மாளவிகா மோகனன் தற்போது தொடங்கி உள்ளார்.
மலையாள சினிமாவில் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கியவர் நடிகை மாளவிகா மோகனன் (Malavika Mohanan). இவரது நடிப்பில் மலையாள சினிமாவில் தொடர்ந்து படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வந்தது. தொடர்ந்து மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை மாளவிகா மோகனன் பிறகு தென்னிந்திய மொழிகளிலும் அதிக அளவில் படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தமிழ் சினிமாவிலும் நடிகை மாளவிகா மோகனன் அதிக அளவில் படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை மாளவிகா மோகனன் தமிழ் சினிமாவில் இறுதியாக நடித்தப் படம் சர்தார் 2. இந்தப் படத்தில் நடிகை மாளவிகா மோகனனின் நடிப்பை ரசிகர்கள் பாராட்டியது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகை மாளவிகா மோகனன் நடிப்பில் அடுத்தடுத்தப் படங்களின் பணிகள் பிசியாக நடைப்பெற்று வருகின்றது.
அந்த வகையில் நடிகை மாளவிகா மோகனன் நடிப்பில் தமிழ் மொழியில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் பாக்கெட் நாவல். இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்த பாக்கெட் நாவல் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்து உள்ள நிலையில் அவருக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.




பாக்கெட் நாவல் படத்தின் டப்பிங் பணியைத் தொடங்கிய மாளவிகா மோகனன்:
மேலும் இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ராஜ் பி. ஷெட்டி, கிஷோர் குமார் ஜி மற்றும் திலிப் சுப்பராயன் என பலர் இந்தப் படத்தில் நடித்து உள்ளனர். மேலும் படம் வருகின்ற ஜனவரி மாதம் 14-ம் தேதி 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் இந்தப் படத்தின் டப்பிங் பணியை நடிகர் விஜய் சேதுபதி முன்னதாக முடித்த நிலையில் தற்போது நடிகை மாளவிகா மோகனன் இந்த பாக்கெட் நாவல் படத்தின் டப்பிங் பணியை தொடங்கி உள்ளார்.இது தொடர்பான அப்டேட்களை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… Vetri Maaran: வட சென்னை படம்தான் எனது பெரிய இன்வெஸ்மென்ட் – வெற்றிமாறன் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!
பாகெட் நாவல் படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
A little laughter, a little drama, and a whole lot of emotion. Here’s @malavikaM_ dubbing for Thiagarajan Kumararaja’s #PocketNovel, releasing worldwide on January 14th 🔥🎬 #PocketNovelTheFilm
#ThiagarajanKumararaja @VijaySethuOffl @gvprakash @MalavikaM_ @RajbShettyOMK https://t.co/vevJuij89c
— Tyler Durden And Kino Fist (@tylerdurdenand1) November 24, 2026
Also Read… Mysskin: லோகேஷ் கனகராஜுடன் படம் பண்ணபோறேன் – மிஷ்கின் ஓபன் டாக்!