அருள் நிதி – அமீர் நடிப்பில் வெளியானது வேட்டசாமி படத்தின் டீசர்!
Vetta Saami Official Teaser Out Now | நடிகர்கள் அருள் நிதி மற்றும் அமீர் இருவரும் இணைந்து தமிழ் சினிமாவில் நடித்துள்ள படம் வேட்ட சாமி. இந்தப் படத்தின் டீசரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ள நிலையில் அது வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அருள் நிதி (Arul Nidhi). இவர் அரசியல் குடும்பத்தை சார்ந்தவராக இருந்தாலும் நடிப்பு மீது இருந்த ஆர்வம் காரணமாக சினிமாவில் நடிகராக எண்ட்ரி கொடுத்தார். அதன்படி கடந்த 2010-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து நடிகர் அருள் நிதி நடிப்பில் அடுத்தடுத்து வெளியான படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் அருள் நிதி நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் அருள்வான். இந்தப் படத்தில் நடிகர் அருள் நிதியின் கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்தது மட்டும் இன்றி பாராட்டையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் அருள் நிதி நடிப்பில் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து வேட்ட சாமி, டிமாண்டி காலணி 3 மற்றும் மை டியர் சிஸ்டர் ஆகியப் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் இவரது நடிப்பில் அடுத்ததாக தமிழ் மொழியில் வெளியாக உள்ள படம் வேட்ட சாமி. இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.




அருள் நிதி – அமீர் நடிப்பில் வெளியானது வேட்டசாமி படத்தின் டீசர்:
அதன்படி இந்த வேட்ட சாமி படத்தினை இயக்குநர் செல்வகுமார் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் அருள் நிதி உடன் இணைந்து நடிகர்கள் அமீர், ஆடுகளம் நரேன், மதுசூதன் ராவ், ஹரீஷ் பேரடி, விஜி சந்திரசேகர், இந்துமதி மணிகண்டன், மைனா நந்தினி, அர்ஜை, ஓ.ஏ.கே.சுந்தர், கவிதா பாரதி, டி.எஸ்.கே ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்தப் படம் வருகின்ற டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் டீசரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் இந்தப் படம் உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read… சூர்யாவின் சீன் படத்திலிருந்து வெளியானது காத்து வீசும் தேசம் வீடியோ பாடல்!
நடிகர் அருள் நிதி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
#VettaSaami Teaser is OUT NOW! ❤️🔥
Vettai Aarambam! 🔥
https://t.co/FHmt8VcH6X— Arulnithi tamilarasu (@arulnithitamil) November 24, 2026
Also Read… பிக் பாஸில் முதல் ஆளாக வந்த வினோத் பாபு பேமிலி – மனைவி கொடுத்த அட்வைஸ்!