AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அரசன் – ராஜன் வகையறா படங்களை ஒன்றாக இயக்குவதில் சவாலா? வெற்றிமாறன் சொன்ன விஷயம்!

Vetri Maarans Arasan & Rajan Vagaiyaraa: தமிழ் சினிமாவில் ரசிகர்களை தனது திரைப்படங்களால் ஈர்த்துவைத்திருப்பவர் இயக்குநர் வெற்றிமாறன். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், அரசன் மற்றும் ராஜன் வகையறா படங்களை ஒன்றாக இயக்கிவருவதில் சவால்கள் இருக்கிறதா? என்பது குறித்து வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

அரசன் – ராஜன் வகையறா படங்களை ஒன்றாக இயக்குவதில் சவாலா? வெற்றிமாறன் சொன்ன விஷயம்!
வெற்றிமாறனின் அரசன் & ராஜன் வகையறாImage Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 24 Nov 2026 17:03 PM IST

கோலிவுட் சினிமாவில் மிகவும் பேமஸான இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் வெற்றிமாறன் (Director Vetri Maaran). இவரின் இயக்கத்தில் இதுவரையிலும் குறைவான படங்கள் மட்டுமே வெளியானாலும், ஒவ்வொரு திரைப்படங்களும் மிக பிரம்மாண்டமாக இருக்கும். இறுதியாக விஜய் சேதுபதியை வைத்து விடுதலை பார்ட் 2 (Viduthalai Part 2) என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். 2024ம் ஆண்டு இறுதியில் வெளியான இப்படமானது எதிர்பார்த்ததை விடவும் குறைவாகவே வரவேற்பை பெற்றது. இதன் பிறகு 2025ம் ஆண்டு இறுதியில் சிலம்பரசனுடன் (Silambarasan) அரசன் (Arasan Movie) என்ற திரைப்படத்தை இயக்குவதில் இணைந்திருந்தார்.

இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க, வட சென்னை படத்தின் டைம் லைனில் நடக்கும் மற்றொரு கதையாக உருவாக்கப்பட்டுவருகிறது. இப்படத்துடன் ராஜன் வகையறா படமும் (Rajan Vagaiyaraa Movie) உருவாக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் இவ்விருபடங்களையும் ஒரே நேரத்தில் இயக்குவதில் சவால்கள் உள்ளதா? என்பது குறித்து வெற்றிமாறன் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: வட சென்னை படம்தான் எனது பெரிய இன்வெஸ்மென்ட் – வெற்றிமாறன் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

அரசன் மற்றும் ராஜன் வகையறா படத்தை ஒரே நேரத்தில் இயக்குவது குறித்து பேசிய வெற்றிமாறன்:

அந்த நேர்காணலில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன் அதில், “நான் இரண்டு படங்களையும் ஒரே யுனிவர்ஸை சேர்ந்தவையாகவே பார்க்கிறேன். பல கதாபாத்திரங்கள், அல்லது குறைந்தபட்சம் அவர்களைப் பற்றிய ரெஃபெரென்ஸ், இந்த இரண்டு படங்களிலும் ஒன்றோடொன்று தொடர்புபடுகின்றன.

இதையும் படிங்க: கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் சிம்புவின் கேரக்டர் இதுவா? வைரலாகும் தகவல்

எனவே, இரண்டு படங்களையும் முற்றிலும் தனித்தனிப் படங்களாகப் படமாக்குவதை விட, ஒரு பெரிய கதையின் வெவ்வேறு பகுதிகளைப் படமாக்குவது போலவே உணர்கிறேன், சவாலாக எடுக்கவில்லை” என அதில் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது.

அரசன் திரைப்படம் குறித்து படக்குழு வெளியிட்ட டீசர் குறித்த எக்ஸ் பதிவு:

சிலம்பரசனின் அரசன் திரைப்படத்தின் ஷூட்டிங்கானது இறுதிக்கட்டத்தில் உள்ளது. ஆனால் தற்போது வெற்றிமாறன், ராஜன் வகையறா படத்தின் ஷூட்டிங்கில் தீவிரமாக உள்ளாராம். இதன் காரணமாக சிம்புவின் அரசன் படத்தின் ஷூட்டிங் மற்றும் ராஜன் வகையறா ஷூட்டிங் என இரண்டும் பேக் டூ பேக் நடந்து வருகிறதாம். இந்த இரு படங்களும் வட சென்னை பட டைம் லைனில் உருவாக்கப்படும் படங்களாக உள்ளது. இது வரும் 2027ம் ஆண்டில் அடுத்தடுத்து வெளியிட படக்குழு திட்டமிட்டுவருகிறதாம்.

Follow Us