AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Shruti Haasan: சூர்யாவுடன் முதல் படம்.. அற்புதமான தமிழ் அறிமுகம் அது எனக்கு – ஸ்ருதிஹாசன் பேச்சு!

Shruti Haasan About Suriya: தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் ஸ்ருதிஹாசன். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போற்ற மொழிகளில் படங்களில் பணியாற்றிவருகிறார். இந்நிலையில் தமிழ் அறிமுகமாக சூர்யாவுடன் 7ஆம் அறிவு படத்தில் பணியாற்றிய தருணம் குறித்து சமீபத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

Barath Murugan
Barath Murugan | Published: 24 Nov 2026 15:10 PM IST
உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள்தான் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் சிறுவயதிலிருந்தே நடிப்பின் மீது ஆர்வம் வைத்திருந்த நிலையில், தனது தந்தையின் ஹே ராம் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார்.

1 / 5
இதன் பிறகும் சினிமாவில் கதாநாயகியாக ஆகவேண்டும் என நினைத்த அவருக்கு முதல் படமாக அமைந்தது இந்தியில் வெளியான லக். இதில் அவர் ஒரு முக்கியமான நடிகையாக நடித்தார். அதன் பிறகு தெலுங்கில் அனகனக ஓ தீருடு என்ற படத்தின் மூலம் நாயகியாக நுழைந்தார்.

2 / 5
இந்த படங்களுக்கு பிறகு கடந்த 2011ம் ஆண்டில் தமிழில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்திலும், சூர்யாவின் நடிப்பிலும் வெளியான 7 ஆம் அறிவு என்ற திரைப்படத்தின் மூலம், தனது முதல் அறிமுகத்தை தமிழில் வழங்கினார்.

3 / 5
இதன் பிறகு முதல்வர் விஜய் முதல் தனுஷ் உள்ளிட்ட பல்வேறு நட்சத்த்திர நடிகர்களுடன் படங்களில் நடித்திருந்தார். இறுதியாக தமிழில் 2025ல் ரஜினிகாந்தின் கூலி படத்தில் அவரின் மகளாக நடித்திருந்தார். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய ஸ்ருதிஹாசன், 7 ஆம் அறிவு படத்தில் சூர்யாவுடன் நடித்த அனுபவம் பற்றி பேசியுள்ளார்.

4 / 5
நடிகை ஸ்ருதிஹாசன் பேசுகையில், எனக்கு தமிழில் சூர்யா சாருடன் முதல் அறிமுகமாக 7 ஆம் அறிவு படம் அமைந்தது. அது தமிழில் எனக்கு முருகதாஸ் சார் கொடுத்த பெரிய வாய்ப்பு அது. சூர்யா சார் அந்த படத்தில் சிறப்பாக நடித்திருந்தார். அதன் பிறகும் அவருடன் நான் படங்களில் பணியாற்றியிருக்கிறேன். அப்பாவுக்கும் (கமல்ஹாசன்), சூர்யா சாரின் பேமிலிக்கும் அவ்வளவு நெருக்கமான உறவு உள்ளது என அதில் அவர் கூறியுள்ளார்.

5 / 5
Follow Us