AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Shruti Haasan: ட்ரெயின் படத்தில் நான் நடித்ததற்கு காரணம் இதுதான் – ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்!

Shruti Haasan About Train Movie: சினிமாவில் மக்களால் அதிகம் வரவேற்கப்படும் நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் ஸ்ருதிஹாசன். இவரை நடிப்பில், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் படங்கள் உருவாகிவருகிறது. இவர் இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெயின் படத்தில் நடித்திருக்கும் நிலையில், அதில் தான் எவ்வாறு நுழைந்தேன் என்பது குறித்து ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.

Barath Murugan
Barath Murugan | Published: 22 Nov 2026 14:42 PM IST
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தனது தந்தையும், நடிகருமான கமல்ஹாசனின் ஹே ராம் என்ற படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தவர் நடிகை ஸ்ருதிஹாசன். இதன் பிறகு இந்தியில் புல்லட் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

1 / 5
இந்தி சினிமாவின் மூலம் நடிகையாக நுழைந்த ஸ்ருதிஹாசனுக்கு ஒரு கதாநாயகியாக வரவேற்பை கொடுத்தது தென்னிந்திய சினிமா.  இவர் தமிழில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், 7ஆம் அறிவு படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.

2 / 5
இதற்க்கு பிறகு தனுஷின் நடிப்பிலும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இயக்கத்திலும் 3 என்ற படத்தில் கதாநாயகியாக மக்களிடையே பெயர்பெற்றார். இந்த படத்தில் பள்ளி சிறுமியாகவும், ஒரு காதல் வயப்பட்ட பெண்ணாகவும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

3 / 5
இந்நிலையில் இவரின் நடிப்பில் இறுதியாக சினிமாவில் வெளியான திரைப்படம் ஆகாஷம்லோ ஒக்க தாரா என்ற படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்திருந்தார். இப்படத்தில் இவரின் கதாபாத்திரம் வித்தியாசமாகவே அமைந்தது. இதன் பிறகு மிஷ்கின் இயக்கத்தில் வரும் 2026 டிசம்பர் 4ம் தேதியில் ட்ரெயின் படம் வெளியாகிறது.

4 / 5
இந்நிலையில் இப்படத்தில் ஒப்பந்தமானது குறித்து பேசிய ஸ்ருதிஹாசன், நான் ட்ரெயின் படத்தில் ஒரு கேமியோ வேடத்தில் நடித்திருக்கிறேன். அது முற்றிலும் எதிர்பாராத ஒன்று. ஆரம்பத்தில், இந்தப் படத்திற்காக ஒரு பாடல் பாடுவதற்கே மிஷ்கின் சார் என்னை அணுகினார். அதன் பிறகு, அவர் என்னிடம் இந்தப் படத்தில் ஒரு கதாபாத்திரம் இருக்கிறது. அதில் நடிக்க உங்களுக்கு விருப்பமா? என்று கேட்டார். அப்படித்தான் நான் இந்தப் படத்தில் இணைந்தேன் என தெரிவித்தார்.

5 / 5
Follow Us