ஒத்திப்போகும் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் மைசா படத்தின் ரிலீஸ்… வெளியானது தகவல்!
Actress Rashmika Mandannas film Myssa has been postponed | நடிகை ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாவதாக இருந்த மைசா படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தற்போது அறிவித்துள்ளது. இது இணையத்தில் ரசிகர்களிடையே வெளியாகி வைரலாகி வருகின்றது.
கடந்த 2016-ம் ஆண்டு முதல் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கியவர் நடிகை ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna). இவரது நடிப்பில் தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. கன்னட சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆன இவர் அதிக அளவில் தெலுங்கு மொழியில் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அது மட்டும் இன்றி அவ்வபோது இந்தி மொழியிலும் படங்களில் நடித்து வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவரது நடிப்பில் இறுதியாக தெலுங்கு சினிமாவில் வெளியான படம் ரணபாலி. இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா அவரது கணவர் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பீடியட் ஆக்ஷன் ட்ராமா பாணியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகை ராஷ்மிகா மந்தனா கதையின் நாயகியாக நடித்து தெலுங்கு சினிமாவில் உருவாகி உள்ள படம் மைசா. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதில் இருந்தே தொடர்ந்து ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.




ஒத்திப்போகும் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் மைசா படத்தின் ரிலீஸ்:
மேலும் இந்தப் படத்தை இயக்குநர் ரவீந்திர புல்லே எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. மேலும் இந்தப் படம் வருகின்ற 27-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இந்தப் படத்தின் வெளியீடு ஒத்தி வைக்கப்படுவதாகவும் விரைவில் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டை படக்குழு தெரிவிக்கும் என்று தெரிவித்துள்ளது. மேலும் இந்தப் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
மைசா படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
We wish to present the world of #MYSAA in its most uncompromised form, delivering the experience it truly deserves.
With this vision in mind, the theatrical release of #MYSAA, originally scheduled for NOVEMBER 27th, has been POSTPONED.
The new release date will be announced very soon.
Until then, keep the energy alive and groove to the rage-filled #OseyRamulamma ❤️🔥🎶
— https://t.co/TKCU7BiuaN
@iamRashmika @RawindraPulle @unformulafilms @TSeries @tseriessouth
— UnFormula Films (@unformulafilms) November 22, 2026
Also Read… ஒருவருக்கொருவர் அன்பையும்… – அனிருத் – காவியா திருமணத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து! –