சிம்பிளாக நடந்துமுடிந்த குக் வித் கோமாளி அஸ்வின் குமாரின் திருமணம் – பொண்ணு யாருனு தெரியுமா?
Ashwin Kumar Marriage: தமிழில் சின்னத்திரையில் வெளியான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பிரபலமானவர் அஸ்வின் குமார். இவர் இன்று (20/11/2026) திருமணம் செய்வதாக தகவல்கள் வெளியாகிவந்த நிலையில், தற்போது அவர் திருமண புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகப் பரவிவருகிறது.
சின்னத்திரை மக்கள் மத்தியில், விஜய் டிவியில் (Vijay TV) வெளியான குக் வித் கோமாளி சீசன் 2 (Cook with Comali 2) நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அஸ்வின் குமார் (Actor Ashwin Kumar). இவர் சின்னத்திரை சீரியல்கள் மற்றும் சினிமாவிலும் படங்களில் நடித்துள்ளார். இவரின் நடிப்பில் தமிழில் சில படங்கள் வெளியாகியுள்ளது. இவர் தமிழில் விஜய் டிவியில் 2013ம் ஆண்டில் வெளியான ஆபிஸ் (Office Serial) என்ற சீரியலில் முக்கியமான வேடத்தில் நடித்து சின்னத்திரையில் நுழைந்தார். இதற்க்கு பிறகு 2015ல் வெளியான “ரெட்டைவால் குருவி” என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்து மேலும் தமிழில் பிரபலமானார். இவ்வாறு தமிழ் சீரியலில் நடித்த இவர், தெலுங்கிலும் சில சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் இவர் சினிமாவில் இயக்குநர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளியான ஓ காதல் கண்மணி என்ற படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்து சினிமா பயணத்தையும் தொடங்கியிருந்தார்.
அந்த விதத்தில் தற்போது மக்கள் மத்தியில் ஒரு ஹேண்ட்சம் பாயாக இருந்துவருகிறார். இந்நிலையில் இவர், 2026 நவம்பர் 20ம் தேதியில் புவனேஸ்வரி என்பவரை திருமணம் செய்வதாக தகவல்கள் வெளியாகிவந்தது. இந்நிலையில் தற்போது அவரின் திருமண புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: அஞ்சாதே பாகம் 2 குறித்து வெளிப்படையாக பேசிய இயக்குநர் மிஷ்கின்!
நடிகர் அஸ்வின் மற்றும் புவனேஸ்வரியின் திருமணம் குறித்து வைரலாகிவரும் இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram
அஸ்வின் திருமணம் செய்த புவனேஸ்வரி யார் தெரியுமா?:
நடிகர் அஸ்வின் குமார், புவனேஸ்வரி என்பவரை இன்று (20/11/2026) கோவையில் திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்கள் இருவரின் திருமணம் குறித்து சில நாட்களாக இணையத்தில் தகவல்கள் வெளியாகிவந்தது. ஆனால் அதை அஸ்வின் உறுதிசெய்யவில்லை என கூறலாம். அதனால் இந்த செய்தி பொய்யாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று (20/11/2026) உண்மையாகவே அஸ்வின் திருமணம் செய்துகொண்டுள்ளார். அவர் திருமணம் செய்துள்ள புவனேஸ்வரி யார் என இணையத்தில் தகவல்கள் பரவிவருகிறது.
இதையும் படிங்க: விறுவிறுப்பான ஸ்பை திரில்லர்… தனுஷின் ஓ.எம் திரைப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த விமர்சனங்கள்!
தமிழில் 80ஸ் காலகட்டத்தில் படிக்காதவன், காக்கிசட்டை மற்றும் விக்ரம் போன்ற பிரம்மாண்டமான படங்களை இயக்கியிருந்த இயக்குநர் ராஜசேகரின் பேத்திதான் புவனேஸ்வரியாம். அந்த விதத்தில் நடிகர் அஸ்வின் குமார், இயக்குநர் ராஜசேகரின் பேத்தி புவனேஸ்வரியைத்தான் திருமணம் செய்துள்ளார். தற்போது இது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது. மேலும் சில ரசிகர்கள் அஸ்வினுக்கு திருமணமாகிவிட்டதா? ஆச்சர்யத்தில் தங்களின் கருத்துக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்துவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.