AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Arasan Movie: அரசன் படத்திலிருந்து அனிருத் விலகிட்டாரா? தயாரிப்பாளர் விளக்கம்!

Arasan Movie Music Director Controversy: இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் சிலம்பரசன் கூட்டணியில் மாபெரும் திரைப்படமாக உருவாக்கப்பட்டுவருவதுதான் அரசன். இதை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரித்துவருகிறார். சமீபகாலமாக அரசன் படத்திலிருந்து அனிருத் விலகிவிட்டதாக தகவல்கள் வெளியாகிவருகிறது. இந்நிலையில், அதற்கு கலைப்புலி எஸ் தாணு விளக்கம் கொடுத்துள்ளார்.

Arasan Movie: அரசன் படத்திலிருந்து அனிருத் விலகிட்டாரா? தயாரிப்பாளர் விளக்கம்!
அரசன் படம்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 19 Nov 2026 17:00 PM IST

தென்னிந்திய மக்கள் மத்தியில் இயக்குநராகவும் சரி, தயாரிப்பாளராகவும் பிரபலமானவராக இருந்துவருபவர் வெற்றிமாறன் (Director Vetri Maaran). இவர் தமிழில் தனுஷின் (Dhanush) பொல்லாதவன் திரைப்படத்தை இயக்கியதன் மூலமாக இயக்குநராக நுழைந்தார். இந்நிலையில் தமிழில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்குநராக பல படங்களை இயக்கி வெற்றிபெற்றிருக்கிறார். இவர் தமிழில் இறுதியாக விஜய் சேதுபதியின் விடுதலை பார்ட் 2 (Viduthalai Part 2) படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் 2024ம் ஆண்டு இறுதியில் வெளியாகியிருந்த நிலையில், எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்த படத்திற்கு பிறகு சூர்யாவின் வாடிவாசல் (Vaadi Vaasal) படத்தில் இணைவதாக கூறப்பட்ட நிலையில், பின் அந்த படத்திற்கு பதிலாக சிலம்பரசனின் (Silambarasan) அரசன் திரைப்படத்தில் (Arasan Movie) இணைந்திருந்தார். இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் தற்போதுவரையிலும் நடந்துவருகிறது.

இதற்கு அனிருத் இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த விதத்தில் சமீபகமலாமாக அனிருத் இப்படத்திலிருந்து விலகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு விளக்கம் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: அருண் விஜய் பர்த்டே ஸ்பெஷல்…இருளன் படத்தின் ரிலீஸ் அப்டேட் இதோ!

அரசன் படத்தில் அனிருத் விலகியதாக கூறப்படும் கருத்துக்கு தயாரிப்பாளர் விளக்கம்:

அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் துணைவிடம், அனிருத் அரசன் திரைப்படத்திலிருந்து விலகியதாக கூறப்படுகிறது.. அது உண்மையா? என கேட்டிருந்தார். அதற்க்கு பதிலளித்த கலைப்புலி எஸ் தாணு, “எல்லா யூகங்களுக்கும் பதில் சொல்ல முடியுமா?. அரசன் திரைப்படத்தின் அடுத்த ஷெட்யூல் ஆரம்பமாகும்போது அனைவரும் தெரிந்துகொள்வார்கள். தீபாவளிக்கு வந்த ப்ரோமோவை பயங்கரமாக விமர்சனம் செய்தார்கள், ஆனால் அது தற்போது யூடியூப்பில் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது அதையும் சொல்லவேண்டியும் அல்லவா” என அதில் கூறியிருந்தார்.

இதையும் படிங்க: OM & AOT.. தங்களின் படங்களுக்கு ஒன்றாக ப்ரோமஷன் செய்த மம்முட்டி – துல்கர் சல்மான்!

ஆனால் அனிருத் விலகிவிட்டாரா? இல்லது அரசன் படத்தில் இருக்கிறாரா? என்பதை அவர் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பொறுமையாக இருந்து பார்க்கலாம், யார் அரசன் படத்தின் இசையமைப்பாளர் என காணலாம்.

அரசன் படம் குறித்து தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு பேசியதாக வைரலாகும் பதிவு:

அரசன் படத்திலிருந்து அனிருத் விலகியதாக வட்டாரங்கள் கூறுகிறது. ஆனால் ஒருபுறம் அவர் இன்னும் இப்படத்திலிருந்து விலகவில்லை என்றும் கூறப்படுகிறது. சிம்பு, வெற்றிமாறன் மற்றும் அனிருத் என இந்த மூவரின் காம்போ இப்படத்தின் மூலமாகவே முதல் முதலாக இணைந்திருந்த நிலையில், எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்தது. இந்நிலையில் அரசன் படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் லிடியன் நாதஸ்வரம் என்ற இசைக்கலைஞர் இசையமைப்பதாகவும் ஒருபுறம் பேசப்பட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us